ETV Bharat / state

திருவொற்றியூர் தொகுதி தவெக வேட்பாளர் செந்தில் குமார் வெற்றி

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட செந்தில் குமார், சுமார் 1,10,067 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திருவொற்றியூர் தவெக வேட்பாளர் செந்தில்
திருவொற்றியூர் தவெக வேட்பாளர் செந்தில் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2026 at 12:46 AM IST

2 Min Read
Choose ETV Bharat

திருவள்ளூர்: திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் செந்தில் குமார் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய தொகுதிகளில் ஒன்றான திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது. சென்னை கடற்கரையை ஒட்டிய தொகுதியாக திருவொற்றியூர் தொகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

வெற்றி விவரங்கள்

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் செந்தில் குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுந்தரராஜை 53,564 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தினார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்கள்:

தவெக- 1,10,067

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 56,503

அதிமுக- 28,320

நாதக- 8,413

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் எண்ணிக்கை

ஆண்கள் -1,17,181

பெண்கள் -1,23,289

மூன்றாம் பாலினம் - 116

மொத்தம் - 2,40,586

ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், திருவொற்றியூர் தொகுதியில் 84.41% வாக்குகள் பதிவானது. இது கடந்த சட்டமன்ற தேர்தலை விட மிக அதிகமான எண்ணிக்கையாகும். இந்நிலையில், திருவொற்றியூர் தொகுதியில் இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது. மீனவர், வன்னியர், பட்டியல் சமூக மக்கள் அதிகம் இருக்கும் இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் சிபிஎம் சார்பாக சுந்தரராஜ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் குப்பன், தவெக சார்பில் செந்தில் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா போட்டியிட்டனர்.

திருவொற்றியூர் தொகுதியை பொறுத்தவரை திமுக பலமாக இருக்கும் தொகுதிகளில் முக்கிய இடம் வகிக்கிறது. கடந்த முறை இந்த தொகுதியை திமுக கைப்பற்றிய நிலையில் தற்போது சிபிஎம் கட்சி இந்த தொகுதியில் களமிறங்குகிறது. கடந்த முறை திமுக இங்கு வெற்றி பெற்றிருந்த நிலையில், மீண்டும் தொகுதியை தங்கள் கூட்டணி வசப்படுத்த வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் சிபிஎம் நிர்வாகிகளுடன் இணைந்து கடந்த ஒரு மாதமாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். அதிமுக தரப்பிலும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது. இந்த தொகுதியில் மற்ற கட்சிகள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கும் நிலையில் சிபிஎம், அதிமுக வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1967-க்கு பிறகு இந்த தொகுதி இதுவரை 13 பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் திமுக 7, அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்த முறை அதிமுக, சிபிஎம் நேரடியாக மோதுவதால் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.சங்கர், அதிமுக வேட்பாளர்குப்பனை சுமார் 38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.