ETV Bharat / state

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

பல்வேறு மாவட்டங்களில் காலியான இருந்த பணியிடங்களும் இந்த இடமாற்றத்தின் கீழ் நிரப்பப்பட்டுள்ளன.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 28, 2026 at 8:52 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை கருத்தில்கொண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், காலியிடங்களை நிரப்பியும் தமிழக அரசு உத்தரவு வெளியிட்டிருக்கிறது.

இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கீழ்க்கண்டோர் எந்த துறையிலிருந்து எந்த துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரம்

பெயர் எந்த துறையிலிருந்து மாற்றம்எந்த துறைக்கு மாற்றம்

டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐ.பி.எஸ்.,

சென்னை ஆயுதப்படை காவல்துறை டிஜிபிசென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டிஜிபி / இயக்குநர் (கூடுதல் பொறுப்பு: சென்னை ஆயுதப்படை காவல்துறை டிஜிபி)
ஹெச்.எம். ஜெயராம், ஐ.பி.எஸ்.காத்திருப்போர் பட்டியல்சென்னை குடிமைப் பாதுகாப்புத் துறை மற்றும் ஊர்க்காவல் படை கூடுதல் தலைமை இயக்குநர்
பவனேஸ்வரி, ஐ.பி.எஸ்.,ஆவடி காவல் ஆணையரகத்தில் தலைமையகம் மற்றும் போக்குவரத்து பிரிவின் காவல் துறை கூடுதல் ஆணையர் / காவல் துறை தலைமை ஆய்வாளர்சென்னை காவல் துறை தலைமையகத்தில் காவல் துறை தலைமை ஆய்வாளர்
ஏ.ஜி. பாபு, ஐ.பி.எஸ்.,சென்னை ரெயில்வே காவல் துறை தலைமை ஆய்வாளர் சென்னை காவல் துறை தலைமையகத்தில் நவீனமயமாக்கல் பிரிவின் காவல் துறை தலைமை ஆய்வாளர்
விஜயலட்சுமி, ஐ.பி.எஸ்.,சென்னை ஆயுதப்படை காவல் துறை துணை காவல் கண்காணிப்பாளர் திருச்சி ஆயுதப்படை காவல் துறை துணை காவல் கண்காணிப்பாளர்
சசி மோகன், ஐ.பி.எஸ்.,கோயம்புத்தூர் வரம்பு துணை காவல் கண்காணிப்பாளர்திண்டுக்கல் சரக டிஐஜி
சாமிநாதன், ஐ.பி.எஸ்.,திண்டுக்கல் சரக டிஐஜிகோயம்புத்தூர் சரக டிஐஜி
மணிவண்ணன், ஐ.பி.எஸ்.,திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் / டிஐஜிராமநாதபுரம் சரக டிஐஜி
தேஷ்முக் சேகர் சஞ்சய், ஐ.பி.எஸ்.,ராமநாதபுரம் சரக டிஐஜிதிருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் / டிஐஜி
ஜெயந்தி, ஐ.பி.எஸ்.,சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு டிஐஜிதாம்பரம் காவல் ஆணையரகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு இணை காவல் ஆணையர் / டிஐஜி
ஜெயலட்சுமி, ஐ.பி.எஸ்.,தாம்பரம் காவல் ஆணையரகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு இணை காவல் ஆணையர்சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு டிஐஜி
சிபி சக்ரவர்த்தி, ஐ.பி.எஸ்.,தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் நிறுவனம், சென்னை – தலைமை விழிப்புணர்வு அதிகாரி / டிஐஜிதிருச்சி சரக டிஐஜி
அதர்ஷ் பச்சேரா, ஐ.பி.எஸ்.,சென்னை சைபர் குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளர்திருச்சி ரெயில்வே காவல் கண்காணிப்பாளர்
பி. ராஜன், ஐ.பி.எஸ்.,திருச்சி ரெயில்வே காவல் கண்காணிப்பாளர்சென்னை ரெயில்வே காவல் கண்காணிப்பாளர்
சி. ஷ்யாமளா தேவிதிருச்சி மாநகர காவல் தலைமையக துணை ஆணையர்சென்னை மத்திய உளவுத்துறை (மதுவிலக்கு குற்றங்கள்) காவல் கண்காணிப்பாளர்
ஈ.டி. சாம்சன், ஐ.பி.எஸ்.,சென்னை மத்திய உளவுத்துறை (மதுவிலக்கு குற்றங்கள்) காவல் கண்காணிப்பாளர்மதுரை அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளர்
ஆர். ராஜேஸ்வரிமதுரை மாநகர காவல் தலைமையக துணை ஆணையர்கோயம்புத்தூர் மாநகர காவல் தலைமையக துணை ஆணையர்
எம்.பி. திவ்யாகோயம்புத்தூர் மாநகர காவல் தலைமையக துணை ஆணையர்மதுரை மாநகர காவல் தலைமையக துணை ஆணையர்
பி. சிபின், ஐ.பி.எஸ்.,செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அய்மான் ஜமால், ஐ.பி.எஸ்.,ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இதையும் படிங்க: ஆந்திரா பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 20 பேர் உயிரிழப்பு