ETV Bharat / state

மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி வாகை சூடிய தவெக வேட்பாளர் வெங்கட்ரமணன்

மயிலாப்பூர் தொகுதியில் திமுக சார்பில் தா. வேலு, பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன், தவெக சார்பில் வெங்கட்ரமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் அருண் ஆகியோர் போட்டியிட்டனர்.

தவெக வேட்பாளர் வெங்கட்ரமணன் வெற்றி
தவெக வேட்பாளர் வெங்கட்ரமணன் வெற்றி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2026 at 7:09 AM IST

|

Updated : May 4, 2026 at 8:13 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், மயிலாப்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வெங்கட்ரமணன் வெற்றி பெற்றுள்ளார்.

மயிலாப்பூர் தொகுதியில் திமுக சார்பில் தா. வேலு, பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன், தவெக சார்பில் வெங்கட்ரமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் அருண் ஆகியோர் போட்டியிட்டனர்.

தா. வேலு கடந்த முறையே மயிலாப்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் என்பதோடு, தொகுதியில் மக்கள் செல்வாக்கையும் அதிகம் பெற்றவர் ஆவார். எனவே, இந்த முறையும் அவர் வெற்றிக் கனியை ருசிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,

அதேபோல், அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனும் அவருக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், தவெகவின் வருகையால் தேர்தல் களமே மாறிப்போனது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலாகவே தவெக வேட்பாளரே முன்னிலையில் இருந்து வந்தார்.

இந்நிலையில், இறுகிகட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தவெக வேட்பாளர் வெங்கட்ரமணன் 7,00,70 வாக்குகளை பெற்றார். திமுகவின் தா. வேலு 41,098 வாக்குகளை பெற்றார். இதன் மூலம் 28,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கட்ரமணன் வெற்றி பெற்றார்.

மயிலாப்பூர் தொகுதி

தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் முக்கியமானது மயிலாப்பூர். இது மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், பட்டினப்பாக்கம் மற்றும் சாந்தோம் போன்ற முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது.

சென்னையில் மீனவ மக்களும், பிராமண சமூகத்தினரும் அதிகம் வசிக்கும் தொகுதியாக மயிலாப்பூர் உள்ளது. பிற சமூகத்தினரும் இங்கு கணிசமாக வசிக்கின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திரையுலக பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அரவிந்த் சுவாமி, த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்களை வாக்காளர்களாக கொண்டது மயிலாப்பூர் சட்டப் பேரவை தொகுதி.

மயிலாப்பூர் தொகுதியில் இதுவரை திமுக மற்றும் அதிமுக தலா 6 முறையும், 2 முறை காங்கிரஸும், 1 முறை ஸ்தாபன காங்கிரஸும், 1 முறை பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன.

இங்கு ஆண்கள் 93,017 பேர், பெண்கள் 1,01,691 பேர், மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் என மொத்தம் 1,94,731 வாக்களர்கள் உள்ளனர். தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் இவர்களில் 74.52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

Last Updated : May 4, 2026 at 8:13 AM IST