ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் வெற்றி
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026: ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பில் துரைராஜ், அதிமுக சார்பில் மனோகரன், நாதக சார்பில் தர்மராஜ், தவெக இருந்து ரமேஷ் ராஜேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

Published : May 4, 2026 at 12:36 AM IST
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் வெற்றி பெற்றார்.
திருச்சி மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இருந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட ஒரே தொகுதியாக இந்த தொகுதி அமைந்துள்ளது. இதனிடையே, கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் எண்ணிக்கை
ஆண்கள் - 1,50,799
பெண்கள் - 1,61,179
மூன்றாம் பாலினம் - 51
மொத்தம் - 3,12,029
ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் 87.95% வாக்குகள் பதிவானது. இது கடந்த சட்டமன்ற தேர்தலை விட மிக அதிகமான எண்ணிக்கையாகும். இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தவெகே வேட்பாளர் ரமேஷ் முன்னிலையில் இருந்து வந்தார். இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், தவெக வேட்பாளர் 33,590 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1952-க்கு பிறகு ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதி இதுவரை 18 பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் அதிமுக 8, திமுக 2, காங்கிரஸ் 2, தவெக 1 முறை வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய திமுக எம்எல்ஏ பழனியாண்டி கடந்த முறை அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனை சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

