ETV Bharat / state

விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 2 வரை தைப்பூச இருமுடி திருவிழா நடைபெற இருக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 17, 2025 at 6:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

மதுரை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற உள்ள இருமுடி திருவிழாவிற்காக விரைவு ரயில் அனைத்தும் மேல்மருவத்தூர் சந்திப்பில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 2 வரை தைப்பூச இருமுடி திருவிழா நடைபெற இருக்கிறது. இதனால் பயணிகளின் வசதிக்காக டிசம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை மேல்மருத்தூரில் கீழ்கண்ட ரயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12636/12635)
  • சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637)
  • டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642)
  • சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661)
  • சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101)
  • தாம்பரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16103)
  • செங்கோட்டை - தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ் (20684)
  • தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691)
  • தாம்பரம் நாகர்கோவில் தாம்பரம் விரைவு ரயில் (22657/22658)

அதேபோல மறு மார்க்கத்தில் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 31 வரை

  • மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638)
  • செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662)
  • கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் (16102)
  • ராமேஸ்வரம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (16104)
  • பனாரஸ் - கன்னியாகுமரி காசி தமிழ்ச் சங்கம் எக்ஸ்பிரஸ் (16368)
  • செங்கோட்டை - சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682)
  • நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692)
  • ராமேஸ்வரம் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் (20850)
  • ராமேஸ்வரம் - பனாரஸ் எக்ஸ்பிரஸ் (22536)
  • ராமேஸ்வரம் - அயோத்தியா கண்டோன்மெண்ட் எக்ஸ்பிரஸ் (22613)
  • தஞ்சாவூர் வழி சென்னை - மதுரை எக்ஸ்பிரஸ் (22623)

பிகானீர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் மேல்மருவத்தூர் நின்று செல்லும்.

டிசம்பர் 18 முதல் 31 வரை கீழ்கண்ட ரயில்கள் நின்று செல்லும்.

  • மதுரை - பிகானீர் எக்ஸ்பிரஸ் (22631)
  • தஞ்சாவூர் வழி மதுரை - சென்னை எக்ஸ்பிரஸ் (22624)
  • கன்னியாகுமரி பனாரஸ் தமிழ் சங்கம் எக்ஸ்பிரஸ் (16367)
  • சென்னை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (12667)

டிசம்பர் 17 முதல் 31 வரை நிற்கும் ரயில்கள் விவரம் வருமாறு:

  • அயோத்தியா கண்டோன்மென்ட் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (22614)
  • ராமேஸ்வரம் - பனாரஸ் எக்ஸ்பிரஸ் (22535)
  • மும்பை லோக மான்ய திலக் - மதுரை எக்ஸ்பிரஸ் (22101)
  • கன்னியாகுமரி - டெல்லி ஹஸ்ரத் நிசாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641)
  • டிசம்பர் 19 முதல் 31 வரை மதுரை - லோக மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (22102)
  • புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20849)
  • நாகர்கோவில் - சென்னை விரைவு ரயில் (12668)
  • டிசம்பர் 16 முதல் 31 வரை புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - பிரோஸ்பூர் எக்ஸ்பிரஸ் (20497)
  • மதுரை - டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் மதுரை எக்ஸ்பிரஸ் (12651/12652)
  • டிசம்பர் 13 முதல் 31 வரை புறப்பட வேண்டிய பிரோஸ்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20498)

ஆகிய ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.