ETV Bharat / state

சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் கபில் வெற்றி

பாமக வேட்பாளர் சரவணன் 78,820 வாக்குகளைப் பெற்று தோல்வியுற்றார்.

சோளிங்கர்
சோளிங்கர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2026 at 1:44 AM IST

|

Updated : May 5, 2026 at 3:22 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ராணிப்பேட்டை: சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளருக்கு மிகப் பெரிய போட்டியாளராக தவெக வேட்பாளர் கபில் உருவெடுத்து, 5,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முக்கிய தொகுதிகளில் ஒன்றான சோளிங்கர் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் எண்ணிக்கை

ஆண்கள் - 1,39,449

பெண்கள் - 1,46,283

மூன்றாம் பாலினம் -15

மொத்தம் - 2,85,747

ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சோளிங்கர் தொகுதியில் 90.12% வாக்குகள் பதிவானது. இது கடந்த சட்டமன்ற தேர்தலை விட மிக அதிகமான எண்ணிக்கையாகும். இந்நிலையில், சோளிங்கர் தொகுதியில் இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது. வன்னியர், பட்டியல் சமூக மக்கள் அதிகம் இருக்கும் இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முனிரத்தினம் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சரவணன், தவெக சார்பில் கபில், நாம் தமிழர் கட்சி சார்பில் அசோக் குமார் போட்டியிடுகின்றனர்.

சோளிங்கர் தொகுதியை பொறுத்தவரை வரை திமுக, அதிமுகவுக்கு நல்ல வாக்கு வங்கி இந்த தொகுதியில் உள்ளன. கடந்த முறை காங்கிரஸ் கட்சி இங்கு வெற்றி பெற்றிருந்த நிலையில், தொகுதியை மீண்டும் வசப்படுத்த வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் கடந்த ஒரு மாதமாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். பாமக தரப்பிலும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது. இந்த தொகுதியில் மற்ற கட்சிகள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கும் நிலையில் பாமக, காங்கிரஸ் வேட்பாளர்களிடையே நேரடி போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1952-க்கு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு இந்த அரக்கோணம் தொகுதி இதுவரை 16 பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் திமுக 1, அதிமுக 6, காங்கிரஸ் 6 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்த முறை காங்கிரஸ், பாமக நேரடியாக மோதுவதால் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், அரக்கோணம் தொகுதியில் பாமக வேட்பாளருக்கு மிகப் பெரிய போட்டியாளராக தவெக வேட்பாளர் கபில் உருவெடுத்தார். அவர் பாமக வேட்பாளர் சரவணனை விட 5,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். அவர் மொத்தமாக 84,506 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சரவணன் 78,820 வாக்குகளைப் பெற்று தோல்வியுற்றார்.

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி - ஒரு பார்வை
தேர்தல்வெற்றி பெற்றவர்கட்சி
2021அ. மு. முனிரத்தினம்காங்கிரஸ்
2016என். ஜி. பார்த்திபன்அதிமுக
2011பி. ஆர். மனோகர்தேமுதிக
Last Updated : May 5, 2026 at 3:22 PM IST