ETV Bharat / state

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது

அவர்கள், அந்த வீட்டிற்கு பல சிறுமிகளை வரவழைத்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 10:08 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கடந்த 06.10.2025 அன்று சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளரை தொடர்பு கொண்டு புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், "அடையாளம் தெரியாத ஒருவர் தனது அலுவலகத்திற்கு வந்து ஒரு Pendrive கொடுத்தார் என்றும், அந்த Pendriveவில் பிரபல தொழிலதிபர் வீரமணி ஒரு சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சி பதிவாகி உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, விபச்சார தடுப்பு பிரிவில் 07.10.2025 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கின் புலன் விசாரணையில் அந்த Pendriveவில் பதியப்பட்ட வீடியோவில் இருந்த நபர் பிரபல கிரானைட் தொழிலதிபர் வீரமணி என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க.. நெல்லை ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருப்பம் - தம்பதி கைது

தொழில் அதிபர் வீரமணி, தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதன் நிர்வாக பொறுப்பை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அவர்கள், அந்த வீட்டிற்கு பல சிறுமிகளை வரவழைத்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்வாறு ஒரு சிறுமியுடனான குற்றத்தின் வீடியோ ஆதாரம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை சோதனையிட்ட போது, இச்சம்பவம் தொடர்புடைய வேறு சில சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த குற்றங்களுக்கு உதவியாகவும், குற்றங்களை மூடி மறைக்க உடந்தையாகவும் இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் மற்றும் முக்கிய நபரான தொழிலதிபர் வீரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இந்த குற்றச் சம்பவம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.