ETV Bharat / state

பெரியாரின் பெயரை சேகர்பாபு சொல்லக்கூடாது... சட்டப்பேரவையில் கொதித்தெழுந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

கடந்த திமுக ஆட்சியில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில், வெறும் 32 பேருக்கு மட்டுமே பணி நியமனங்களை வழங்கிவிட்டு, இப்போது எங்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா (Taminadu Assembly (Youtube Channel))
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 27, 2026 at 7:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, பெரியாரின் பெயரையே உச்சரிக்கக்கூடாது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டப்பேரவையில் ஆவேசமாக கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற திட்டத்தை கடந்த ஆட்சியில் திமுக கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் எத்தனை தலித், பி.சி, எம்.பி.சி சமூகத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகராக உருவாக்கியுள்ளனர்? என பேரவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, "ஆட்சி பொறுப்பேற்றவுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் 32 பேர்களுக்கு பணி நியமனனை வழங்கப்பட்டது.

'அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்', திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை, நன்மனம் படைத்த சிலர் அணுகினார்கள். எந்தெந்த திருக்கோயில்கள் ஆகமத்திற்க்குள் வருகிறது. எந்தெந்த திருக்கோவில்கள் ஆகமதிற்கு வெளியே இருக்கிறது என்ற முடிவு தெரிந்த பிறகுதான், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தீர்ப்பு வருகிறது. மேலும் உயர் நீதிமன்றமே, அந்த கமிட்டிக்கு தலைவரையும் உறுப்பினரையும் நியமித்தது.

ஒரு தலைவர், உச்ச நீதிமன்றத்தில் ஆகம கமிட்டி தான் நியமனத்தை இறுதி செய்ய வேண்டும், என்று வழக்கு தொடர்ந்துள்ளார். ஆறு மாத காலம் அதற்கு நேரத்தை நீங்கள் கேட்டுள்ளீர்கள். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் தனியாக அரசாணை வெளியிட்டு 3 மூத்த நீதிபதிகளை நியமித்து, அதற்கான சட்டப் போராட்டத்தை ஆட்சியில் இருந்தவரை நடத்தினோம்.

ஆட்சியில் இல்லாதபோதும் அந்த சட்ட போராட்டத்தை நடத்த தயாராக உள்ளோம். எந்த கோவில் ஆகமத்திற்குள் வருகிறது, எந்த கோயில் ஆகமத்திற்கு வரவில்லை என்று முடிவு செய்யும் பொறுப்பு தற்போது ஆளும் கட்சியான உங்களுக்கே உள்ளது. அந்த வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் நீங்கள் அர்ச்சகரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க: ரூ. 3 கோடியில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் - அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு

இதைத்தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "இதில் இருக்கும் அரசியல் தற்போது பொது மக்களுக்கு தெரிந்திருக்கும். வெறும் 32 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணையம் வழங்கிவிட்டு, தற்போது இந்த வழக்கை நீங்கள் நடத்தி, அதை செயல்படுத்துங்கள் என்று எங்களிடம் கூறுகிறீர்கள்.

நாங்கள் கண்டிப்பாக அந்த வழக்கை வெற்றிகரமாக நடத்தி அர்ச்சகராக ஆக்குவோம். சில மதவாதிகளின் அழுத்தத்தால் வழக்கை இவர்களே போட்டுள்ளனர். அண்ணன் சேகர்பாபு, பெரியாரின் பெயரை சொல்லவே கூடாது. போன ஆட்சியில் பெரியாரின் பெயரை, பெயரளவில் சொல்லிவிட்டு 'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' திட்டத்தை கைவிட்டுவிட்டது. திமுகவின் எந்த திட்டமாக இருந்தாலும் அது பேப்பர் அளவில்தான் உள்ளது" என்று கூறினார்.