சங்கரன்கோவில் தொகுதியை இழந்த திமுக; தவெகவை வென்ற அதிமுக!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026: சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் திலீபன் ஜெயசங்கர், காங்கிரஸ் வேட்பாளர் சங்கை கணேசன், தவெக வேட்பாளர் ராமராஜா, நாதகவின் கவிதா உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Published : May 4, 2026 at 4:34 PM IST
|Updated : May 5, 2026 at 4:49 PM IST
சங்கரன்கோவில் (தென்காசி): தென்காசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர்.திலீபன் ஜெய்சங்கர், தவெக வேட்பாளர் சி.ராமராஜனை 6,489 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
டாக்டர்.திலீபன் ஜெய்சங்கர் மொத்தம் 64,865 வாக்குகளையும், ராமராஜன் 58,376 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் ஈ.இராஜா, அதிமுக வேட்பாளர் வி.எம்.ராஜலெட்சுமியை சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இந்த முறை இத்தொகுதியில் திமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளர் திலீபன் ஜெயசங்கர், காங்கிரஸ் வேட்பாளர் சங்கை கணேசன், தவெக வேட்பாளர் ராமராஜா மற்றும் நாதகவின் கவிதா உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 91,019, பெண் வாக்காளர்கள் 1,01,917, மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் என மொத்தம் 1,92,948 வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவு சதவீதம் 81.04 ஆகும்.

