ETV Bharat / state

செங்கிப்பட்டில் நடைபெறும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு - திமுக தலைமை முக்கிய அறிவிப்பு

பல்லடத்தில், “பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ” என்று சொல்லத்தக்க வகையில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு, டிசம்பர் 29 ஆன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

பல்லடத்தில் நடந்த வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கோப்புப்படம்
பல்லடத்தில் நடந்த வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 5, 2026 at 3:19 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு 26.01.2026 திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மகளிர் மேம்ப்பாட்டுக்கென தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து, 1.31 கோடி மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த 29.12.2025 அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ” என்று சொல்லத்தக்க வகையில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கருப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற, திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு முன்னிலையில், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் வருகிற ஜனவரி-19 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு 26.01.2026 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் நடைபெறும்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ. பெரியசாமி, க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.ராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி - திமுக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி ஆகியோர் இதில் பங்கேற்று பேச உள்ளனர்.

அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஸ்பொய்யாமொழி, எஸ்.ரகுபதி, சி.வி.கணேசன், கோவி.செழியன், சிவ வீ.மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா பூண்டி கே.கலைவாணன், எம்.எல்.ஏ., காடுவெட்டி தியாகராஜன், எம்.எல்.ஏ., க.வைரமணி, க. அன்பழகன், எம்.எல்.ஏ., வீ.ஜெகதீசன், நிவேதா முருகன், எம்.எல்ஏ., கே.கே.செல்லபாண்டியன், என்.கௌதமன், டி.பழனிவேல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருண்நேரு, முரசொலி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இம்மாநாட்டினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வார்கள்.

நிறைவாக, தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., நன்றியுரையாற்றுகிறார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.