ETV Bharat / state

பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி: மதுரையில் போக்குவரத்து மாற்றம்

பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் வழித்தடமான மதுரை விமான நிலையம் பெருங்குடி சந்திப்பிலிருந்து அவனியாபுரம் பைபாஸ் ரோடு, அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோடு வரை எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதி இல்லை.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 10:54 PM IST

4 Min Read
Choose ETV Bharat

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நாளை நடைபெறவுள்ளதால், மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் நாளை மாலை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். இதை முன்னிட்டு நாளை காலை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்டுள்ள சாலைகள்/இடங்கள்

* அருப்புக்கோட்டை ரிங் ரோடு சந்திப்பிலிருந்து விரகனூர் ரவுண்டானா சந்திப்பு வரை

* பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் வழித்தடமான மதுரை விமான நிலையம் பெருங்குடி சந்திப்பிலிருந்து அவனியாபுரம் பைபாஸ் ரோடு, அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் ரோடு வரை.

1. கனரக வாகனங்கள் செல்ல வேண்டிய வழித்தடங்கள்

கப்பலூர் பாலம் சந்திப்பிலிருந்து அருப்புக்கோட்டை ரிங் ரோடு வழியாக மேலூர் சந்திப்பிற்கும் மற்றும் மேலூர் சந்திப்பிலிருந்து அருப்புக்கோட்டை ரிங் ரோடு வழியாக கப்பலூர் பாலம் சந்திப்பிற்கும் செல்ல அனைத்து கனரக சரக்கு வாகனங்களுக்கும் காலை 6:00 மணி முதல் இரவு வரை தடை செய்யப்பட்டுள்ளது.

* திருச்சியிலிருந்து மேலூர் மார்க்கமாக மதுரை அருப்புக்கோட்டை ரிங்ரோடு கப்பலூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் மேலூர் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து அழகர்கோவில், சத்திரப்பட்டி, அலங்காநல்லூர் வழியாக தனிச்சியம் பிரிவு சந்திப்பு சென்று இடதுபுறம் திரும்பி சமயநல்லூர், துவரிமான், கப்பலூர் பாலம் வழியாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லவேண்டும்.

* கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து கப்பலூர் பாலம் சந்திப்பு, அருப்புக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பு வழியாக திருச்சி, சென்னை நோக்கி செல்லக்கூடிய அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் திருமங்கலம், கப்பலூர் சந்திப்பிலிருந்து ரிங்ரோடு வழியாக நாகமலை புதுக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பு, சமயநல்லூர் சந்திப்பு, தனிச்சியம் பிரிவு சந்திப்பு சென்று வலதுபுறம் திரும்பி அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அழகர்கோவில், மேலூர் வழியாக திருச்சி செல்லவேண்டும்.

* தூத்துக்குடி, அருப்புக்கோட்டையிலிருந்து விரகனூர் ரிங் ரோடு வழியாக திருச்சி, சென்னை நோக்கி செல்லககூடிய அனைத்து சரக்கு வாகனங்கள் அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் சென்று கள்ளிக்குடி, சமத்துவபுரம், திருமங்கலம், கப்பலூர் சந்திப்பிலிருந்து ரிங்ரோடு வழியாக நாகமலை புதுக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பு, சமயநல்லூர் சந்திப்பு, தனிச்சியம் பிரிவு சந்திப்பு சென்று வலதுபுறம் திரும்பி அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அழகர்கோவில், மேலூர் வழியாக திருச்சி செல்லவேண்டும்.

* திருச்சியிலிருந்து மதுரை விரகனூர் ரிங் ரோடு வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் செல்லக்கூடிய கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் மேலூர் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து பூவந்தி, திருப்புவனம் வழியாக செல்லலாம்.

* சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து விரகனூர் ரிங் ரோடு, அருப்புக்கோட்டை ரிங்ரோடு வழியாக அருப்புக்கோட்டை, தூத்துக்குடிக்கு செல்லும் கனரக சரக்கு வாகனம் அனைத்தும் பூவந்தி, மானாமதுரை திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி வழியாக செல்லலாம்.

* தூத்துக்குடி, அருப்புக்கோட்டையிலிருந்து விரகனூர் ரிங் ரோடு வழியாக ராமநாதபுரம், சிவகங்கைக்கு செல்லக்கூடிய சரக்கு வாகனங்கள் அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி, நரிக்குடி, திருப்புவனம் வழியாக ராமநாதபுரத்திற்கும், சிவகங்கை செல்லும் வாகனங்கள் திருப்புவனத்திலிருந்து பூவந்தி சென்று சிவகங்கைக்கு செல்லலாம்.

* தேனி மாவட்டத்திலிருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் நாகமலைபுதுக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சமயநல்லூர் சந்திப்பு, தனிச்சியம் பிரிவு சந்திப்பு சென்று வலதுபுறம் திரும்பி அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அழகர்கோவில், மேலூர், பூவந்தி, திருப்புவனம் வழியாக செல்லலாம். மேலும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு மேற்கண்ட வழித்தடத்தை பயன்படுத்தி செல்லலாம்

* திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் தனிச்சியம் பிரிவு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அழகர்கோவில், மேலூர், பூவந்தி, திருப்புவனம் வழியாக செல்லலாம். மேலும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு மேற்கண்ட வழித்தடத்தை பயன்படுத்தி செல்லலாம்.

பொது போக்குவரத்து செல்லும் வழித்தடங்கள்

கப்பலூர் சந்திப்பிலிருந்து விரகனூர் ரிங் ரோடு சந்திப்பு மற்றும் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் வழித்தடமான மதுரை விமான நிலையம் பெருங்குடி சந்திப்பிலிருந்து அவனியாபுரம் பைபாஸ் ரோடு, அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோடு வரை எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதி இல்லை.

* மாட்டுத்தாவணியிலிருந்து விரகனூர் ரிங் ரோடு, கப்பலூர் வழியாக விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, தேனி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய அரசு, தனியார் பஸ்கள், பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் மதுரை கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, வைகை வடகரை சாலை குருவிக்காரன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை வழியாக கபடி ரவுண்டானா சென்று பாத்திமா கல்லூரி சந்திப்பு வழியாக சமயநல்லூர் சென்று இடதுபுறம் திரும்பி துவரிமான் ரோடு சந்திப்பு, நாகமலைபுதுக்கோட்டை 4 வழிச்சாலை சந்திப்பு, கப்பலூர் பாலம் சந்திப்பு வழியாக எந்த ஒரு மாவட்டத்திற்கும் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருமங்கலத்திற்குசெல்லும் வாகனங்கள் வழக்கமான வழித்தடமான திருப்பரங்குன்றம் சாலையை தவிர்த்து அரசரடி, காளவாசல் சந்திப்பு வழியாக நாகலைபுதுக்கோட்டை ரிங்ரோட்டில் இடதுபுறம் திரும்பி சுப்பலூர் வழியாக திருமங்கலத்திற்கும் திருமங்கலத்திலிருந்து இதே வழித்தடத்தில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் இருக்கும் செல்ல வேண்டும்.

* கப்பலூர் பாலம் சந்திப்பிலிருந்து, மண்டேலாநகர் சந்திப்பு, விரகனூர் சந்திப்பு மற்றும் பாண்டிகோவில் சாலை வழியாக மாட்டுத்தாவணி செல்லக்கூடிய வாகனங்கள் கப்பலூர் பாலம் சந்திப்பிலிருந்து தனக்கன்குளம் சந்திப்பு, நாகமலைபுதுக்கோட்டை 4 வழிச்சாலை சந்திப்பு, துவரிமான் ரோடு சந்திப்பு வந்து வலதுபுறம் திரும்பி காளவாசல், பாத்திமா கல்லூரி, கபடி ரவுண்டானா, எம்.எம்.லாட்ஜ், ஆவின் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

* தூத்துக்குடி, காரியாபட்டியிலிருந்து அருப்புக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பு, மண்டேலாநகர் சந்திப்பு, விரகனூர் சந்திப்பு, பாண்டிகோவில் வழியாக மாட்டுத்தாவணி செல்லக்கூடிய வாகனங்கள் காரியாபட்டி, நடுக்குளம், எம்.ஆலங்குளம், பொட்டப்பாளையம் சந்திப்பு, சிந்தாமணி ரோடு சந்திப்பு வந்து வலதுபுறம் திரும்பி விரகனூர் ரோடு சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணிக்கும், சிந்தாமணி சந்திப்பு வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்ட் இருக்கும் செல்ல வேண்டும்.

* ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து விரகனூர் சந்திப்பு, மண்டேலாநகர் சந்திப்பு, அருப்புக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பு வழியாக காரியாபட்டி, தூத்துக்குடிக்கு செல்லக்கூடிய வாகனங்கள் ராமநாதபுரம் ரோடு, மணலூர் சந்திப்பு, கீழடி சந்திப்பு, கொந்தகை சந்திப்பு, பொட்டப்பாளையம் சந்திப்பு எம்.ஆலங்குளம், நடுக்குளம் வழியாக காரியாபட்டி, தூத்துக்குடிக்கு செல்ல வேண்டும்.

* பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்துதெற்குவாசல் சந்திப்பு, அவனியாபுரம் வழியாக காரியாபட்டி, வலையங்குளம் செல்லும் வாகனங்கள் தெற்குமாரட் வீதி, மஹால் ரோடு, செயின்ட் மேரீஸ் சந்திப்பு, சிந்தாமணி ரோடு, பனையூர், பொட்டப்பாளையம் சந்திப்பு, எம்.ஆலங்குளம், சோளங்குருணி வழியாக செல்ல வேண்டும்.

பொதுக்கூட்டத்திற்கு வரும் வாகனங்களின் வழித்தடங்கள்

* திருச்சி, மேலூரில் இருந்து வரும் வாகனங்கள் ஒத்தக்கடை ரிங்ரோடு சந்திப்பு, உயர்நீதிமன்றம் பின்புறம், சிவகங்கை ரோடு சந்திப்பு, விரகனூர் ரோடு சந்திப்பு, சிந்தாமணி ரோடு சந்திப்பு, செம்பூரணி ரோடு சந்திப்பு வந்து அடுத்தாற்போல் அமிக்கா ஓட்டல் அருகே வாகனங்களை நிறுத்தவேண்டும்.

* சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வாகனங்கள் சிவகங்கை ரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி விரகனூர் ரோடு சந்திப்பு வழியாக அமிக்கா ஓட்டல் அருகே நிறுத்தவேண்டும்.

* நத்தம், அழகர்கோவில் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் கடச்சனேந்தல் சந்திப்பு, ஒத்தக்கடை சந்திப்பு, ஒத்தக்கடை ரிங்ரோடு சந்திப்பு, உயர்நீதிமன்றம் பின்புறம், சிவகங்கை ரோடு சந்திப்பு, விரகனூர் ரோடு சந்திப்பு வழியாக வந்து அமிக்கா ஓட்டல் அருகே நிறுத்தவேண்டும்.

* அருப்புக்கோட்டை,தூத்துக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் அருப்புகோட்டை சந்திப்பு, மண்டேலாநகர் வழியாக வாகனங்களை நிறுத்தவேண்டும்.

* விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட வாகனங்கள் கப்பலூர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அருப்புக்கோட்டை சந்திப்பு, மண்டேலா நகர் வழியாக வந்து நிறுத்தவேண்டும்

* தேனி, திண்டுக்கல் வாகனங்கள் சுற்றுச்சாலையை பயன்படுத்தி கப்பலூர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அருப்புக்கோட்டை சந்திப்பு, மண்டேலா நகர் வழியாக வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.