ETV Bharat / state

இருசக்கர வாகனங்கள் மோதியதில் 2 பேர் தூக்கி வீசப்பட்டு விபத்து - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

தொடர்ச்சியாக அப்பகுதியில் உள்ள மும்முனை சந்திப்பில் விபத்து ஏற்படுவதால், மாநகராட்சி உடனடியாக வேகத்தடை அமைத்து, இனி மேலும் விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் 2 பேர் தூக்கி வீசப்பட்டு விபத்து
இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் 2 பேர் தூக்கி வீசப்பட்டு விபத்து (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 12, 2026 at 8:21 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஆவடியில் உள்ள மூன்று சாலை சந்திப்பில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில், இருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகின்றன.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 30வது வார்டு செந்தில் நகர் பகுதியில் ராஜாஜி சாலை, மகாத்மா காந்தி சாலை, சிந்தாமணி சாலை என மூன்று சாலைகளும் சந்திக்கும் ஜங்ஷன் அமைந்துள்ளது. இங்கு ஒரு முனையில் இருந்து மறுமுனை சாலைக்கு செல்லும் வாகனங்களால் எதிர்புறம் மற்றும் பக்கவாட்டிலிருந்து வரும் வாகனங்களை பார்க்க முடியாதவாறு சாலை அமைப்பு இருக்கிறது.

இதனால் மும்முனை சந்திப்பில் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 11) இந்த சந்திப்பில் ஒரு பக்க சாலையில் இருந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பெண், மற்றொரு முனையில் இருந்து வரும் இருசக்கர வாகனத்தை கவனிக்காமல் வேகமாக வந்து மோதியுள்ளார். இந்த விபத்தில் எதிரில் வாகனத்தை ஓட்டி வந்த நபர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் 2 பேர் தூக்கி வீசப்பட்டு விபத்து (ETV Bharat Tamil Nadu)

அதே போன்று மற்றொரு இளைஞர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், எதிர்திசையில் ஒரு பெண் ஓட்டி வந்த இருச்சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்த நிலையில், இருவரும் சுயநினைவின்றி சாலையில் கிடந்தனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு உடனடியாக அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வீடு திரும்பினர்.

மேற்கூறிய இரண்டு விபத்துகளின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பார்ப்போருக்கு பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இரண்டாவது விபத்தில் பெண்கள் அலறும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து; பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி

தொடர்ச்சியாக இந்த மும்முனை சந்திப்பில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமன அந்த பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக மும்முனை சந்திப்பில் வேகத்தடை அமைத்து, இனி மேலும் விபத்து ஏற்படாத வகையிலும், விபத்தினால் உயிரிழப்பு ஏற்படாத வகையிலும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.