ETV Bharat / state

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: தமிழக வளர்ச்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை - உவகை ஆராய்ச்சி குழு

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் தமிழக வளர்ச்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக கூறுவதற்கு எந்த சான்றும் இல்லை என்றும் உவகை ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்தனர்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 27, 2026 at 9:54 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டதால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது என உவகை ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உவகை ஆராய்ச்சிக் குழு இன்று (ஆகஸ்ட் 27) செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தியது. அப்போது, பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து, தற்போதைய விமான நிலைய கட்டமைப்பு திறன் மற்றும் மாற்று வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்த தரவுகளை ஆராய்ச்சி குழு வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அந்தக் குழு கூறுகையில், "சென்னை விமான நிலையத்தின் தற்போதைய திறனில் சுமார் 64 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதை முறையாக வடிவமைக்கப்படாததால் அதன் முழுமையான பயன்பாடு சாத்தியமில்லாத நிலையில் இருக்கிறது. தற்போதுள்ள விமான நிலைய கட்டமைப்பை முறையாக பராமரித்து, இரண்டாவது ஓடுபாதையை மேம்படுத்தி பயன்படுத்தினாலே விமானப் போக்குவரத்து திறனை அதிகரிக்க முடியும்.

தொழில் நிறுவனங்கள் அனைத்தும் சென்னையை நோக்கி மட்டுமே வருவதில்லை. திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. உற்பத்தி பொருட்களின் சரக்கு போக்குவரத்தை பொறுத்தவரை, ஆண்டுக்கு சுமார் 11 லட்சம் டன் அளவிலான சரக்குகளைக் கையாளும் திறன் இருந்தும், தற்போது 34 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் இறக்குமதியில் சுமார் 97 சதவீதம் கடல் வழியாகவும், 3 சதவீதம் மட்டுமே விமானம் மூலமாகவும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டுக்கு கடல் வழி வர்த்தகம் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

இதையும் படிங்க: ஒரு மணி நேரம் மக்கள் பிரச்சனை மீதி நேரம் சண்டை: இது சட்டமன்றமா? சண்டை மன்றமா? பிரேமலதா ஆவேசம்

அத்துடன், தற்போதுள்ள விமான நிலையங்களை முறையாக பராமரித்து, அவற்றின் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் அதிக விமானங்களை இயக்குவதற்கான வசதிகளை ஏற்படுத்த முடியும்.

சென்னை விமான நிலையத்தில் விமான சரக்கு இறக்குமதியை அதிகரிக்க வேண்டும். நிர்வாகக் குறைபாடுகளை முதலில் சரிசெய்ய வேண்டும். இதைவிட்டுவிட்டு புதிய விமான நிலையத்தை அமைக்க முயற்சிப்பது மக்களின் சுமையை அதிகரிக்கும்" என்றனர்.

தொடர்ந்து, "பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் தமிழக வளர்ச்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக கூறுவதற்கு எந்தச் சான்றும் இல்லை" என்றும் உவகை ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்தனர்.