பல்லடம் தொகுதியில் தவெக வேட்பாளர் வெற்றி
பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் 1,21,297 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அபார வெற்றி பெற்றுள்ளார்.

Published : May 4, 2026 at 2:20 AM IST
பல்லடம் (திருப்பூர்): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ராம்குமார் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் கறிக்கோழி வளர்ப்பும், விசைத்தறி தொழிலும் பிரதானமாக உள்ளது. காற்றாலைகள் மற்றும் பின்னலாடையைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள தொகுதியாகவும் உள்ளது. இந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார்? என்ற எதிர்பார்ப்பு தொகுதி வாக்காளர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
வெற்றி விவரங்கள்:
பல்லடம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ராம்குமார், 1,21,297 வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பரமசிவத்தை சுமார் 37,897 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள்:
தவெக- 1,21,297
அதிமுக- 83,400
திமுக- 78,625
நாதக- 13,141
வாக்குப்பதிவு விவரங்கள்
கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பல்லடம் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 480 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்தனர். இதன்மூலம் சுமார் 90.59% வாக்குகள் பதிவாகியுள்ளது.
கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பல்லடம் தொகுதியில் 66.63% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த முறை 23.96% வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளது.
வேட்பாளர்கள் விவரங்கள்
பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் செல்வராஜ், அதிமுக சார்பில் பரமசிவம், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழினியன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராம்குமார் உள்பட மொத்தம் 15 பேர் போட்டியிட்டனர்.
கடந்த தேர்தல்களின் விவரங்கள்
கடந்த 1957- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரை நடந்த 15 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக 9 முறையும், திமுக 2 முறையும், காங்கிரஸ் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நடராஜன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை 32,174 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2021- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முத்துரத்தினத்தை 32,691 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
வாக்காளர்களின் விவரங்கள்
பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தமாக 3,29,849 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,59,554 ஆண் வாக்காளர்களும், 1,70,265 பெண் வாக்காளர்களும், 30 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.
பல்லடம் சட்டமன்றத் தொகுதி- ஒரு பார்வை
| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
| 2016 | நடராஜன் | அதிமுக |
| 2021 | எம்.எஸ்.எம்.ஆனந்தன் | அதிமுக |

