ETV Bharat / state

“அதிமுக - என்டிஏ கூட்டணியில் யாருக்கு யார் தலைமை என்பதே தெரியாமல் உள்ளார்கள்” - விளாசிய மு.க.ஸ்டாலின்

நம்பர் 1 மாநிலம் மட்டுமல்ல, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ‘One and Only’ மாநிலமும் நம்முடைய தமிழ்நாடு தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 2, 2026 at 2:15 PM IST

3 Min Read
Choose ETV Bharat

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல் தான் இருக்கிறது எனவும், மோடி தேர்தல் நேரத்தில் பொய்யை அவிழ்த்து விடுகிறார் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னையில் ஆங்கில வார இதழ் சார்பில் நடைபெற்ற ‘TAMIL NADU LEADERSHIP SUMMIT’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அனைத்து துறைகளிலும் ஆல்-ரவுண்டராக உயர்ந்து இருக்கிறோம். அனைத்து பகுதிகளிலும் பரவலான, சமச் சீரான எல்லோருக்குமான வளர்ச்சியை திராவிட மாடல் ஆட்சியில் சாதித்துக் காட்டியிருக்கிறோம். அதனா ல்தான், இந்த ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது.

Advanced-ஆக செயல்படும் அரசு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், புதிய தொழில் முதலீடுகள் மூலமாக முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, வேலைவாய்ப்புகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் பெரிய பெரிய மேம்பாலங்கள், பல்வேறு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. கிராம சாலைகளையும் மேம்படுத்தி இருக்கிறோம்.

காலநிலை மாற்றத்தை மனதில் வைத்து Advanced-ஆக செயல்படுவதிலும் தமிழ்நாடு தான் இன்றைக்கு முன்னோடியாக இருக்கிறது. மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் என நிறைய இருக்கின்றன. என்னால் உறுதியாக சொல்ல முடியும், இத்தனை முத்திரைத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் மாநில அரசு இந்தியாவிலேயே வேறு எங்கும் நிச்சயமாக இருக்க முடியாது. இதையெல்லாம் யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

நம்பர் 1 மாநிலம்

நாங்கள் இப்படி ஆல் ரவுண்டராக அடித்து ஆடுவதால் தான், இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக உள்ளது. இதை ஒன்றிய பா.ஜ.க. அரசே பாராட்டியிருக்கிறது. நம்பர் 1 மாநிலம் மட்டுமல்ல, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ‘One and Only’ மாநிலமும் நம்முடைய தமிழ்நாடு தான். பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்ல, மனித மேம்பாட்டு குறியீட்டிலும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பது தான் எங்களின் பெருமைக்குரிய விஷயம்” என்றார்.

தேர்தல் நேரத்தில் பொய்

மேலும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியா முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களில், அதாவது 'டபுள் எஞ்சின்' என்று அவர்கள் சொல்லும் 'டப்பா எஞ்சின்' ஓடும் மாநிலங்களில் இப்படி ஒரு வளர்ச்சியை காட்டிட முடியுமா? அவர்கள் செய்வதெல்லாம் வன்முறை, வெறுப்பு பேச்சு, பிற்போக்கு வாதம். அதற்கு நேர்மாறாக, முற்போக்கு அரசு எங்கள் திராவிட மாடல் அரசு. முக்கியமாக, நாங்கள் செய்த சாதனைகளையெல்லாம் ஒன்றிய அரசின் உதவி இல்லாமலேயே சாதித்திருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் அவர்களின் நெருக்கடிகளை மீறி சாதித்திருக்கிறோம்.

நேற்று மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி, மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலப் பணிகள் தாமதம் பற்றி குற்றஞ்சாட்டி பேசியிருக்கிறார். அவர் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக-தான் இந்த திட்டம் வரக் கூடாது என்று தடை செய்தார்கள். திமுக அரசு வந்து தான், ஒன்றிய அரசிடம் சொல்லி தற்போது பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடிக்கு சொல்ல சாதனைகள் இல்லாததால், தேர்தல் நேரத்தில் பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

யாருக்கு யார் தலைமை?

இதைவிட பெரிய காமெடி என்னவென்றால், பழனிசாமி ‘அதிமுக ஆட்சி அமைக்கும்’ என்று சொல்கிறார். அவரை மேடையில் வைத்துக் கொண்டே, பிரதமர் நரேந்திர மோடி ‘என்டிஏ ஆட்சி’ அமையும் என்கிறார். யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல் தான் இவர்கள் கூட்டணி இருக்கிறது. இதனால் தான், இந்த தேர்தல் ‘தமிழ்நாடு vs என்டிஏ’ என்று தெளிவாக சொன்னேன். அப்போது சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் அதை உறுதிப்படுத்திகிறார்கள். தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற தேர்தலில் நிச்சயம் தமிழ்நாடு வெல்லும். திராவிட மாடல் 2.0-வில் எங்கள் Record-யை நாங்களே Beat செய்வோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநருக்கு என்ன வேலை? - வைகோ கேள்வி

திமுக கொள்கை கூட்டணி

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக கூட்டணி எண்ணிக்கையில் அமையப் பெற்ற கூட்டணி அல்ல. எண்ணத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணி. தமிழ்நாட்டில் இந்த கூட்டணி தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதும் எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைந்திருக்கின்றன. இன்னும் இணைய இருக்கின்றன. அதனால், இதை நான் சவாலாகக் கருதவில்லை. இதை கொள்கை கூட்டணியாக நாங்கள் கொண்டு செல்கிறோம்” என்றார்.

மதுரையில் பேசிய பிரதமர் மோடி திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது ஒரு கானல் நீராக இருக்கும் என்று சொல்லியிருந்தாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “மோடியை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்று தான் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அதுதான் கானல் நீராக சென்றுகொண்டிருக்கிறதே தவிர, அவர் சொல்வது போன்று இல்லை” என பதிலளித்தார்.