ETV Bharat / state

அமைச்சர் பதவி போனாலும் பரவாயில்லை; பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் - அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்

திமுக, அதிமுக போன்ற சராசரி கட்சியல்ல; விசிக ஒரு விடுதலைக்கான இயக்கம். விடுதலையும், தமிழ் தேசியமும் தான் எங்கள் உயிர் மூச்சு என்று வன்னி அரசு தெரிவித்தார்.

அமைச்சர் வன்னி அரசு
அமைச்சர் வன்னி அரசு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 12, 2026 at 7:35 AM IST

1 Min Read
Choose ETV Bharat

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் வண்டிமேடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (அக்.11) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாலாஜி, சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “திண்டிவனம் தொகுதியில் நம்பிக்கையோடு என்னை போட்டியிட வைத்தார்கள். திண்டிவனத்தை, ‘திண்டிவளம்’ என மாற்றுவோம். இந்த தொகுதியில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கி வருகிறோம். வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி" என தெரிவித்தார்.

கட்சி தொடங்கியது முதலே ‘தமிழ் தேசியம் என்பதுதான் உயர் மூச்சு, தேசிய இனங்களின் அடையாளம்; விடுதலையே மிக முக்கியம்’ விடுதலை சிறுத்தைகள் இயக்கம் முழங்கி வருகிறது” என்றார்.

தொடர்ந்து தவெகவுடனான கூட்டணி குறித்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, “பாமக உள்ளே வந்தால் உங்கள் நிலை என்ன என்ற கேள்வி தொடர்கிறது. பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம். அதற்கான வாய்ப்பில்லை. பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என்பதுதான் அதன் பிரகடனம்.

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் தவெக வெற்றிக்கு பாமக காரணமா? திருமாவளவன் பதில்

"அமைச்சர் பதவி இருக்கும் இல்லாமல் போகும். எனக்கு அமைச்சர் பதவியைவிட எங்கள் தலைவர் தான் முக்கியம்; விடுதலை சிறுத்தைகள்தான் முக்கியம்; நம் போராட்டம்தான் முக்கியம் என்பதை பலமுறை சொல்லியிருக்கிறேன். அதைத்தான் திரும்பவும் சொல்கிறேன்" என்று ஆணித்தரமாக கூறினார்.

மேலும், “பாமக உள்ளே வந்தால் உங்கள் நிலை என்று கேட்பவர்களுக்கு இதை சொல்கிறேன, விசிக தேர்தலை புறக்கணித்த ஒரு இயக்கம். தேர்தலுக்கான இயக்கமல்ல; திமுக, அதிமுக போன்ற சராசரி கட்சியல்ல; விசிக ஒரு விடுதலைக்கான இயக்கம். விடுதலையும், தமிழ் தேசியமும் தான் எங்கள் உயிர் மூச்சு. போலி தமிழ் தேசியவாதிகள், பிரபாகரன் பெயரை வைத்துப் பிழைப்பு நடத்துகிறார்கள்" என்றும் விமர்சித்துப் பேசினார்.