ETV Bharat / state

கடந்த 6 ஆண்டுகளில் திமுகவில் நடந்ததை சொல்லட்டுமா? பேரவையில் கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா

திமுகவினர் வார்த்தைகளை விட வேண்டாம். அமைதியாக உங்களது மானியக் கோரிக்கையை பற்றி மட்டும் பேசுங்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 27, 2026 at 9:45 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: கடந்த 6 ஆண்டுகளில் திமுகவில் என்ன நடந்தது என்று நான் சொல்ல ஆரம்பித்தால், அது உங்களுக்கு நல்லதல்ல என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 27) சமூகநீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடந்தது.

சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா, "பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுக ஆட்சியை குற்றம் சொல்வதிலேயே முனைப்புக் காட்டி வருகிறார். அவர் எங்களுடன் இருந்தபோது என்ன மாதிரியான செயல்களை செய்தார் என்று எங்களுக்கு தெரியும்" எனக் கூறினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “2015-ல் இருந்து 2025 வரை திமுகவில் நான் பணி செய்தேன். இது அனைவருக்கும் தெரியும். 2014-ல் திமுக 40 தொகுதி தோற்ற நேரத்திலும், அக்கட்சிக்காக வேலை செய்ய வந்தவன் நான். முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கேட்டுப் பாருங்கள். என்னுடைய வேலை எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியும்.

நான் இருந்த இடத்தில் யாருக்கும் துரோகம் செய்தது கிடையாது. உண்மையாக அண்ணாவின் கட்சி என்றுதான் பணி செய்ய ஆரம்பித்தேன். சமூக நீதிக்காக தேர்தல் வேலையை செய்தவன் நான்.

இதையும் படிங்க: ஒரு மணி நேரம் மக்கள் பிரச்சனை மீதி நேரம் சண்டை: இது சட்டமன்றமா? சண்டை மன்றமா? பிரேமலதா ஆவேசம்

கடந்த ஆறு ஆண்டுகளில் திமுகவில் என்ன நடந்தது என்று சொல்ல ஆரம்பித்தால் அது உங்களுக்கு நல்லது அல்ல. திமுகவினர் வார்த்தைகளை விட வேண்டாம். அமைதியாக உங்களது மானிய கோரிக்கையை பற்றி மட்டும் பேசுங்கள்” என எச்சரிக்கும் விதமாகப் பேசினார்.

இதனால் பேரவையில் திமுகவினருக்கும், ஆளுங்கட்சியினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பேசிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், “எதிர்க்கட்சியினர் வாளோடுதான் வருவார்கள். அதனை எதிர்க்கும் கேடயமாகத்தான் ஆளும்கட்சி அதனைத் தடுக்க வேண்டும். மாறாக, ஆளும் கட்சி வாளை எடுக்கக்கூடாது என அண்ணா ஒரு முறை தெரிவித்துள்ளார். ஆகையால், அண்ணாவின் கருத்தை நான் தற்பொழுது இந்த பேரவைக்கு நினைவூட்ட விரும்புகிறேன்” என்றார்.