செல்லூர் ராஜூ தொகுதியில் தவெக வேட்பாளர் தங்கப்பாண்டி வெற்றி
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026: மதுரை மேற்கு தொகுதியில் திமுகவின் ரகு பாலாஜி, அதிமுக செல்லூர் கே.ராஜு, நாதக-வின் விக்னேஷ் குமார், தவெக-வில் இருந்து எஸ்.ஆர்.தங்கப்பாண்டியன் ஆகியோர் போட்டியிட்டனர்

Published : May 4, 2026 at 12:34 AM IST
|Updated : May 4, 2026 at 9:49 PM IST
மதுரை (மேற்கு): தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (மே 4) வெளியாகி வரும் நிலையில், மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. அதன் முடிவில், மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் தங்கப்பாண்டி 88250 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து திமுக வேட்பாளர் பாலாஜி 76319 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார்.
மதுரை மாவட்டத்தில் மதுரை மேற்கு, மேலூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.
கடந்த 1967ஆம் ஆண்டு மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் இந்த தொகுதியில் அதிகமாக உள்ளனர். இந்த தொகுதியில் கடந்த 23ஆம் தேதி பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு படையாக திரண்டு வந்து வாக்களித்தனர். இந்த தொகுதியில் 1,35,052 ஆண் வாக்காளர்களும், 1,40,452 பெண் வாக்காளர்களும், 12 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,75,516 வாக்காளர்கள் உள்ளனர்.
அதன்படி இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 77.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் 65.81 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை வாக்குப்பதிவு பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்குகள் 2,75,516 பதிவான வாக்குகள் 2,14,209 (77.75%) ஆகும்.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் செல்லூர் கே.ராஜு, திமுக சார்பில் ரகு பாலாஜி, நாதக சார்பில் வழக்கறிஞர் விக்னேஷ் குமார், தவெக சார்பில் எஸ்.ஆர்.தங்கப்பாண்டியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அரசியல் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான அறியப்படும் செல்லூர் ராஜூ, தொடர்ச்சியாக நான்காவது முறை வெற்றி பெற முனைப்பு காட்டும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டார். எனினும் இந்த தொகுதியில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
| இதையும் படிங்க: ‘சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026 லைவ் அப்டேட்ஸ்’ |
1967-க்கு பிறகு மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதி இதுவரை 12 பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் திமுக மூன்று முறையும், அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 2 முறையும், சிபிஐ ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சின்னம்மாளை செல்லூர் கே.ராஜு வெறும் 9,121 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
| மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி - ஒரு பார்வை | ||
| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
| 2021 | செல்லூர் ராஜூ | அதிமுக |
| 2016 | செல்லூர் ராஜூ | அதிமுக |
| 2011 | செல்லூர் ராஜூ | அதிமுக |

