ETV Bharat / state

சென்னையில் மதுபான கலந்த ஐஸ்கிரீம் விற்பனையா? உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

தவறான தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் சம்பந்தப்பட்ட யூடியூப்பர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம் வகைகள்
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம் வகைகள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 6, 2026 at 6:31 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: மதுபான கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை அண்ணா நகரில் இயங்கி வரும் பிரபல ஐஸ்கீரிம் கடையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம்கள் விற்கப்படுவதாக தமிழக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்துள்ளது. அதனைத் தாெடர்ந்து திருவள்ளுர் மாவட்ட உணவு நியமன அலுவலர் கதிரவன் உத்தரவின் பேரில், அம்பத்தூர் உணவு பாதுபாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் குறிப்பிட்ட கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அங்கு விற்கப்படும் பல்வேறு வகையான ஐஸ்கிரீமை ஆய்வு செய்தனர் . ஆய்வுக்கு பின்னர் ஐஸ்கிரீமில் கலக்கப்படும் மதுபான பெயர்களைக் கொண்ட பிளேவர்களின் (Flavor) மாதிரிகளை ஆய்வு செய்தனர். அப்போது மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படவில்லை என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை
உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: மும்பை டூ சென்னை...50 ரூபாய் வலி நிவாரணி மாத்திரையை 500 ரூபாய்க்கு விற்று வந்த 4 பேர் கைது

ஆனாலும் கடையில் இருந்து ஐஸ்கிரீமில் கலக்கப்படும் பிளேவர்களின் மாதிரிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். அதன் ஆய்வுகள் முடிவுகள் ஒரு வாரத்தில் வரும் என தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இதுபோன்ற கடைகளுக்கு செல்லும் பல யூடியூப்பர்கள் ரிவ்யூ செய்து கடையில் விற்கப்படும் பொருட்களின் உண்மைதன்மை அறிந்து 'புட் ரிவியூ' செய்ய வேண்டும் என ஏற்கனவே உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

இதனை கவனத்தில் கொள்ளாமல் குழந்தைகளுக்கு மது கலந்து ஐஸ் கிரீம் விற்பனை செய்யப்படுகிறது என்ற தவறான தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் சம்பந்தப்பட்ட யூடியூப்பர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.