ETV Bharat / state

பாம்பின் வசிப்பிடமாக மாறிய வீடு... தோண்ட தோண்ட 19 பாம்பு குட்டிகள் வந்ததால் உரிமையாளர் அதிர்ச்சி

வீட்டின் தரைத்தளத்தில் பயன்படுத்தப்படாத பகுதிகளில் 39 பாம்பு முட்டைகளை பார்த்த வனத்துறையினர், தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 19 நல்ல பாம்பு குட்டிகளை மீட்டனர்.

19 பாம்புக் குட்டிகள் மீட்பு
19 பாம்புக் குட்டிகள் மீட்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 4:17 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: எத்திராஜ் கல்லூரி அருகே குடியிருப்பின் கான்கிரீட் பிளவுகளை தோண்டத் தோண்ட வெளியேறிய பாம்பு குட்டிகளால் உரிமையாளர் மற்றும் வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரி அருகே ஒரு குடியிருப்புக்கு பின்புறத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்துள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் நேற்று மதியம், பயன்படுத்தப்படாத பகுதியில் சில முட்டைகளை பார்த்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர், வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து கிண்டி வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அவை நல்ல பாம்பு முட்டைகள் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த இடத்தில் ஆய்வு செய்த போது ஒன்றின் பின் ஒன்றாக தரைக்கு கீழே 39 நல்ல பாம்பு முட்டைகள் பொறிக்கப்பட்ட நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்து முட்டைகளும் பொறிக்கப்பட்டு ஓரிரு தினங்கள் மட்டுமே இருக்கும் என வனத்துறை கூறியதால், உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். மேலும், பாம்பு குட்டிகள் கீழே உள்ள பயன்படுத்தப்படாத கான்கிரீட் தளத்தில் இருக்கலாம் என சந்தேகப்பட்டனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் வனத்துறை ஊழியர்கள் கான்கிரீட் பிளவுகளை தோண்டி எடுத்தனர். சுமார் 4 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்திய போது, ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் 19 நல்ல பாம்பு குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து மீட்டனர்.

பின் இரவு ஆனதால், மற்ற பாம்பு குட்டிகளை மீட்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து 19 நல்ல பாம்பு குட்டிகளையும் பத்திரமாக மீட்ட வனத்துறை ஊழியர்கள், அதனை பாதுகாப்பாக செங்கல்பட்டு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடித்த ‘ஜாக்பாட்’ - புதிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மேலும் 39 பொறிக்கப்பட்ட முட்டைகளில் 19 பாம்பு குட்டிகள் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 20 நல்ல பாம்பு குட்டிகள், அதே வீட்டின் தரைக்கு கீழே அல்லது பயன்படுத்தப்படாத பிற பகுதிகளில் இருக்கலாம் என வனத் துறை அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியதின் பேரில் இன்றும் நல்ல பாம்பு குட்டிகளை மீட்கும் தேடுதல் வேட்டையில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 10 நாட்களுக்கு முன்பாக அதே வீட்டில் பெரிய அளவிலான நல்ல பாம்பு ஒன்று வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அன்று மீட்கப்பட்ட அந்த நல்ல பாம்பின் குட்டிகள் தான் இவை அனைத்தும் என வனத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.