ETV Bharat / state

அரூர் தொகுயில் அதிமுக வேட்பாளர் வே.சம்பத்குமார் வெற்றி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026: அரூர் தனித் தொகுதியில் திமுக சார்பில் ஏ.சண்முகம், அதிமுக தரப்பில் வே.சம்பத்குமார், நாதக-வின் அனிதா அண்ணாதுரை, தவெக சார்பில் கே.ராகேஷ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

அரூர் சட்டமன்ற தொகுதி
அரூர் சட்டமன்ற தொகுதி (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2026 at 2:50 AM IST

1 Min Read
Choose ETV Bharat

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில், அதிமுக வேட்பாளர் வே.சம்பத் குமார் 3,329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

அரூர் தொகுதியில் பதிவான வாக்குகள், தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டன.

23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் வே.சம்பத் குமார் 75523 வாக்குகள் பெற்று, 3,329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் ஏ.சண்முகம் 72194 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

பின்னணி:

அரூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2001க்குப் பிறகு 3 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 3 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

2016-இல் அதிமுக வேட்பாளர் ஆர்.முருகன், திமுக வேட்பாளர் சா.ராஜேந்திரனை 11,421 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆர். முருகன், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்டதாலும், டி.டி.வி. தினகரன் அணிக்கு ஆதரவு அளித்ததாலும் 2017-ல் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் 2019-இல் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

2019-இல் நடந்த இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட வே.சம்பத்குமார், திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமாரை சுமார் 8,900 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2021-இல், அதிமுக சார்பில் வே.சம்பத்குமார் மீண்டும் போட்டியிட்டு, திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் ஏ.குமாரை 30,362 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சிட்டிங் எம்எல்ஏ வி.சம்பத்குமார் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து மீண்டும் களம் காண்கிறார்.