வார விடுமுறையில் காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கானாங்கத்தை, வஞ்சிரம், வவ்வால், சீலா, சங்கரா, திருக்கை ஆகிய மீன் வகைகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

Published : July 5, 2026 at 1:07 PM IST
சென்னை: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் வாங்க அசைவ பிரியர்கள் குவிந்தனர். சிறிய வகை மீன்களின் வரத்து அதிகரிப்பால் அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் விடுமுறை தினங்களில் மீன் சந்தை களைக்கட்டும். திருவிழா போன்று பல்வேறு இடங்களில் இருந்து அசைவ பிரியர்கள் பல வகை மீன்களை கிலோ கணக்கில் வாங்க இங்கு குவிவார்கள். மீன்களின் வரத்தை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படும்.
குறிப்பாக மீன் விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் இங்கு கூடை கூடையாக மீன்களை வாங்கி செல்வார்கள். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று, அதிகாலை முதலே மீன் பிரியர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், குறைந்த அளவிலான விசைப்படகுகள் மட்டும கரைக்கு திரும்பி வந்ததால் கடந்த இரண்டு வாரங்களாக பெரிய வகை மீன்களின் வரத்து குறைவாக காணப்படுகிறது.
இருப்பினும், சிறிய வகை மீன்கள் அதிகளவில் பிடித்து வரப்படுகின்றன. அதிகாலை விசைப்படகில் இருந்து மீன்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை தொடங்கியது. சிறிய வகை மீன்களின் வரத்து அதிகரித்ததால், விலை குறைந்துள்ளது.
கானாங்கத்தை, வஞ்சிரம், வவ்வால், சீலா, சங்கரா, திருக்கை, சுறா, நண்டு, இறால், பண்ண பாறை உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. அதிகபடியாக வஞ்சிரம் கிலோ ரூ.1,300க்கும், கொடுவா கிலோ ரூ.1,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தேங்காய் பாறை கிலோ ரூ.900க்கு, ஷீலா மற்றும் பால் சுறா ஆகிய மீன்கள் கிலோ ரூ.800க்கும், சங்கரா கிலோ ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டது. நண்டு, நவரை, பண்ணா, காணங்கத்தை, கடுமா ஆகிய மீன்கள் கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டன.
சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட் பகுதிகளுக்கு மீன்களை விற்பனை செய்வதற்காக சில்லறை வியாபாரிகள் தங்களுக்கு தேவையான மீன்களை கூடை கூடையாக வாங்கி சென்றனர்.
உணவகங்களுக்கு பெரிய வகை மீன்கள் வாங்க குவிந்தவர்கள் சிறிய மீன்களால் ஏமாற்றம் அடைத்தனர். மீன் பிரியர்கள் அவர்களுக்கு விருப்பமான மீன்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
| இதையும் படிங்க: 40 ஆண்டு இருள் வாழ்க்கைக்கு விடிவு - மின்சாரத்தை காணப்போகும் மதுரை தீர்த்தக்காடு மக்கள் |
இன்றைய மீன்களின் விலை பட்டியல்
- வஞ்சிரம் - ரூ.1,300
- கொடுவா - ரூ.1,000
- தேங்காய் பாறை - ரூ.900
- ஷீலா - ரூ.800
- பால் சுறா - ரூ.800
- சங்கரா - ரூ.500
- பாறை - ரூ.400
- இறால் - ரூ.400
- நண்டு - ரூ.300
- நவரை - ரூ.300
- பண்ணா - ரூ.300
- காணங்கத்தை - ரூ.300
- கடுமா - ரூ.300
- நெத்திலி - ரூ.200

