ETV Bharat / state

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னையில் அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 192 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 23, 2026 at 2:52 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் நடந்து முடிந்து இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 01.01.2026 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல், சிறப்பு தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்.23) அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் குடும்பத்தாருடைய பெயர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 4,079 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 192 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கரூர் சம்பவத்தில் என் மீது பழி போட்டது ஏன்? - முதல்வர் ஸ்டாலினுக்கு தவெக விஜய் பகிரங்க கேள்வி

மேற்படி நடைப்பெற்று முடிந்த சிறப்பு தீவிரத் திருத்தத்தின்படி, சென்னை மாவட்டத்தில் 13,65,763 ஆண் வாக்காளர்கள், 14,64,344 பெண் வாக்காளர்கள் மற்றும் 829 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 28,30,936 வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

சென்னை 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்
சென்னை 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் (ETV Bharat Tamil Nadu)

தற்போது வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, சென்னை மாவட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் - 1,95,856, பெரம்பூர் - 2,22,792, கொளத்தூர் - 2,07,251, வில்லிவாக்கம் - 1,59,764, திருவிக நகர் 1,78,793, எழும்பூர் - 1,34,879, ராயபுரம் - 1,56,931, துறைமுகம் - 116896, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - 1,63,866, ஆயிரம் விளக்கு - 1,53,903, அண்ணா நகர் - 1,81,402, விருகம்பாக்கம் - 196536, சைதாப்பேட்டை - 2,00,697, தியாகராய நகர் - 1,54,943, மயிலாப்பூர் 1,94,731, வேளச்சேரி - 2,11,691 என மொத்தமாக 28,30,936 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இதில் குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1,16,896 வாக்காளர்களும், அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 2,22,792 வாக்காளர்களும் உள்ளனர்.