தி.மு.க-வின் மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு - முழு பட்டியல் வெளியீடு
தி.மு.க அமைப்பில் தற்போதுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Published : August 28, 2026 at 3:06 PM IST
சென்னை: தி.மு.க செயற்குழு கூட்டத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கான பட்டியல் வெளியாகியுள்ளது.
திமுக மறுசீரமைப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம், கொள்கை - அமைப்புமுறை - செயல்பாடுகள் – உடன்பிறப்புகள் என்ற நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் இயக்கம். இந்நான்கையும் காலங்கள் தோறும் நாம் புதுப்பித்தும், மேன்மைப்படுத்தியும், கூர்தீட்டியும், செழுமைப்படுத்தியும் வந்திருக்கிறோம். இவை அனைத்தும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் எண்ணங்கள் அடிப்படையில்தான் அமைந்துள்ளன.
அந்த அடிப்படையில், கடந்த 22.8.2026 அன்று நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிகமுக்கியமான முடிவுகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்.
கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல், இதுவரையில் 15 முறை கழக அமைப்புரீதியாகத் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக 16-ஆவது கழக அமைப்புத் தேர்தலை நடத்திடவும், பல்வேறு அமைப்புரீதியாக நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவும் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது மாவட்டக் கழகங்கள் குறித்த தீர்மானமாகும்.
அதில், தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்து, எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் கழகத் தலைவரான எனக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து, கழக மறுசீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், கழக முன்னணியினருடன் கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளை 110 மாவட்டங்களாகப் பகுத்து அறிவிக்கிறேன். அதில், அதிகமான மக்கள் தொகை இருப்பதன் காரணமாகச் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| இதையும் படிங்க: இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முதலமைச்சர் விஜய் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு |
110 மாவட்டங்களின் பட்டியல்
| வ. எண் | மாவட்டம் | தொகுதிகள் |
| 1 | கன்னியாகுமரி கிழக்கு | கன்னியாகுமரி, நாகர்கோவில் |
| 2 | கன்னியாகுமரி கிழக்கு | குளச்சல், கிள்ளியூர் |
| 3 | கன்னியாகுமரி வடக்கு | பத்மநாபபுரம், விளவங்கோடு |
| 4 | திருநெல்வேலி வடக்கு | திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை |
| 5 | திருநெல்வேலி தெற்கு | நாங்குநேரி, இராதாபுரம் |
| 6 | தூத்துக்குடி தெற்கு | திருச்செந்தூர், திருவைகுண்டம் |
| 7 | தூத்துக்குடி மத்திய | தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் (தனி) |
| 8 | தூத்துக்குடி வடக்கு | விளாத்திக்குளம், கோவில்பட்டி |
| 9 | தென்காசி கிழக்கு | சங்கரன்கோவில் (தனி), தென்காசி, ஆலங்குளம் |
| 10 | தென்காசி மேற்கு | வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர் |
| 11 | விருதுநகர் வடக்கு | சிவகாசி, விருதுநகர், திருச்சுழி |
| 12 | விருதுநகர் கிழக்கு | சாத்தூர், அருப்புக்கோட்டை |
| 13 | விருதுநகர் மேற்கு | இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் (தனி) |
| 14 | சிவகங்கை தெற்கு | சிவகங்கை, மானாமதுரை (தனி) |
| 15 | சிவகங்கை வடக்கு | காரைக்குடி, திருப்பத்தூர் |
| 16 | இராமநாதபுரம் கிழக்கு | இராமநாதபுரம், திருவாடானை |
| 17 | இராமநாதபுரம் மேற்கு | பரமக்குடி (தனி), முதுகுளத்தூர் |
| 18 | தேனி வடக்கு | பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர் |
| 19 | தேனி தெற்கு | ஆண்டிப்பட்டி, கம்பம் |
| 20 | திண்டுக்கல் கிழக்கு | நத்தம், திண்டுக்கல் |
| 21 | திண்டுக்கல் மத்திய | ஆத்தூர், நிலக்கோட்டை (தனி) |
| 22 | திண்டுக்கல் மேற்கு | பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் |
| 23 | மதுரை தெற்கு | திருப்பரங்குன்றம், திருமங்கலம் |
| 24 | மதுரை மேற்கு | சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி |
| 25 | மதுரை கிழக்கு | மேலூர், மதுரை கிழக்கு |
| 26 | மதுரை வடக்கு | மதுரை வடக்கு, மதுரை தெற்கு |
| 27 | மதுரை மத்திய | மதுரை மத்திய, மதுரை மேற்கு |
| 28 | நீலகிரி | உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர் |
| 29 | ஈரோடு கிழக்கு | ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி |
| 30 | ஈரோடு மத்திய | ஈரோடு மேற்கு, பெருந்துறை |
| 31 | ஈரோடு வடக்கு | பவானி, அந்தியூர் |
| 32 | ஈரோடு மேற்கு | கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி) |
| 33 | திருப்பூர் மத்திய | திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு |
| 34 | திருப்பூர் கிழக்கு | தாராபுரம் (தனி), காங்கேயம் |
| 35 | திருப்பூர் வடக்கு | அவினாசி (தனி), பல்லடம் |
| 36 | திருப்பூர் தெற்கு | உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் |
| 37 | கோவை தெற்கு | பொள்ளாச்சி, வால்பாறை (தனி) |
| 38 | கோவை மேற்கு | தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு |
| 39 | கோவை கிழக்கு | சூலூர், சிங்காநல்லூர் |
| 40 | கோவை மத்திய | கோவை வடக்கு, கோவை தெற்கு |
| 41 | கோவை வடக்கு | மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் |
| 42 | கிருஷ்ணகிரி கிழக்கு | ஊத்தங்கரை (தனி), பர்கூர் |
| 43 | கிருஷ்ணகிரி மத்திய | கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி |
| 44 | கிருஷ்ணகிரி மேற்கு | ஓசூர், தளி |
| 45 | தருமபுரி மேற்கு | பென்னாகரம், தருமபுரி, பாலக்கோடு |
| 46 | தருமபுரி கிழக்கு | பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) |
| 47 | நாமக்கல் மேற்கு | திருச்செங்கோடு, குமாரபாளையம் |
| 48 | நாமக்கல் கிழக்கு | சேந்தமங்கலம் (ப.கு), இராசிபுரம் (தனி) |
| 49 | நாமக்கல் மத்திய | நாமக்கல், பரமத்தி வேலூர் |
| 50 | சேலம் மேற்கு | மேட்டூர், எடப்பாடி |
| 51 | சேலம் தெற்கு | சங்ககிரி, வீரபாண்டி |
| 52 | சேலம் வடக்கு | ஏற்காடு (ப.கு), ஓமலூர் |
| 53 | சேலம் மத்திய | சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு |
| 54 | சேலம் கிழக்கு | கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி) |
| 55 | புதுக்கோட்டை வடக்கு | கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை |
| 56 | புதுக்கோட்டை மேற்கு | விராலிமலை, திருமயம் |
| 57 | புதுக்கோட்டை கிழக்கு | ஆலங்குடி, அறந்தாங்கி |
| 58 | கரூர் மேற்கு | அரவக்குறிச்சி, கரூர் |
| 59 | கரூர் கிழக்கு | கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை |
| 60 | அரியலூர் | அரியலூர், ஜெயங்கொண்டம் |
| 61 | பெரம்பலூர் | பெரம்பலூர் (தனி), குன்னம் |
| 62 | திருச்சி கிழக்கு | லால்குடி, மணச்சநல்லூர், |
| 63 | திருச்சி மத்திய | திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு |
| 64 | திருச்சி வடக்கு | முசிறி, துறையூர் (தனி) |
| 65 | திருச்சி தெற்கு | மணப்பாறை, திருவெறும்பூர் |
| 66 | திருவாரூர் வடக்கு | திருவாரூர், நன்னிலம் |
| 67 | திருவாரூர் தெற்கு | திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி |
| 68 | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம், கீழ்வேளூர் (தனி), வேதாரண்யம் |
| 69 | மயிலாடுதுறை | மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் |
| 70 | கடலூர் மேற்கு | திட்டக்குடி (தனி), விருத்தாச்சலம் |
| 71 | கடலூர் வடக்கு | நெய்வேலி, பண்ருட்டி |
| 72 | கடலூர் தெற்கு | புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி), சிதம்பரம் |
| 73 | கடலூர் கிழக்கு | கடலூர், குறிஞ்சிப்பாடி |
| 74 | தஞ்சாவூர் வடக்கு | திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம் |
| 75 | தஞ்சாவூர் மேற்கு | பாபநாசம், திருவையாறு |
| 76 | தஞ்சாவூர் கிழக்கு | தஞ்சாவூர், ஒரத்தநாடு |
| 77 | தஞ்சாவூர் தெற்கு | பட்டுக்கோட்டை, பேராவூரணி |
| 78 | கள்ளக்குறிச்சி மேற்கு | ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி (தனி) |
| 79 | கள்ளக்குறிச்சி கிழக்கு | உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் |
| 80 | விழுப்புரம் வடக்கு | செஞ்சி, மைலம் |
| 81 | விழுப்புரம் தெற்கு | விக்கிரவாண்டி, திருக்கோயிலூர் |
| 82 | விழுப்புரம் மத்திய | திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம் |
| 83 | திருவண்ணாமலை தெற்கு | திருவண்ணாமலை, செங்கம் (தனி) |
| 84 | திருவண்ணாமலை மத்திய | கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் |
| 85 | திருவண்ணாமலை வடக்கு | போளூர், ஆரணி |
| 86 | திருவண்ணாமலை கிழக்கு | வந்தவாசி (தனி), செய்யாறு |
| 87 | திருப்பத்தூர் வடக்கு | வாணியம்பாடி, ஆம்பூர் |
| 88 | திருப்பத்தூர் தெற்கு | ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் |
| 89 | வேலூர் வடக்கு | காட்பாடி, கீழ்வைத்தினான்குப்பம் (தனி) |
| 90 | வேலூர் தெற்கு | வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி) |
| 91 | இராணிப்பேட்டை வடக்கு | அரக்கோணம் (தனி), சோளிங்கர் |
| 92 | இராணிப்பேட்டை தெற்கு | இராணிப்பேட்டை, ஆற்காடு |
| 93 | செங்கல்பட்டு கிழக்கு | திருப்போரூர், செய்யூர் (தனி) |
| 94 | செங்கல்பட்டு மேற்கு | செங்கல்பட்டு, மதுராந்தகம் (தனி) |
| 95 | செங்கல்பட்டு வடக்கு | பல்லாவரம், தாம்பரம் |
| 96 | காஞ்சிபுரம் வடக்கு | ஆலந்தூர், திருப்பெரும்புதூர் (தனி) |
| 97 | காஞ்சிபுரம் தெற்கு | உத்திரமேரூர், காஞ்சிபுரம் |
| 98 | திருவள்ளூர் கிழக்கு | கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி) |
| 99 | திருவள்ளூர் மத்திய | பூவிருந்தவல்லி (தனி), ஆவடி |
| 100 | திருவள்ளூர் மேற்கு | திருத்தணி, திருவள்ளூர் |
| 101 | சென்னை வடகிழக்கு | திருவொற்றியூர், மாதவரம் |
| 102 | சென்னை வடக்கு | பெரம்பூர், கொளத்தூர் |
| 103 | சென்னை வடமேற்கு | இராயபுரம், ஆர்.கே.நகர் |
| 104 | சென்னை மத்திய | எழும்பூர் (தனி), அண்ணா நகர் |
| 105 | சென்னை மத்திய-கிழக்கு | சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு |
| 106 | சென்னை மத்திய-மேற்கு | மதுரவாயல், அம்பத்தூர் |
| 107 | சென்னை கிழக்கு | துறைமுகம், திரு.வி.க.நகர் (தனி), வில்லிவாக்கம் |
| 108 | சென்னை தென்மேற்கு | விருகம்பாக்கம், தியாகராய நகர் |
| 109 | சென்னை தென்கிழக்கு | சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி |
| 110 | சென்னை தெற்கு | சோழிங்கநல்லூர் |
மேலும், “அறிவிக்கப்பட்டுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் தற்போதுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, மேற்குறிப்பிடப்பட்டுள்ள கழக மாவட்டங்களின் அடிப்படையில், நகர - ஒன்றிய - பகுதி - பேரூர் - வட்ட - கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் என்றும், தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், மறுசீரமைப்புக்குழு மூலம் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என திமுக வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

