ETV Bharat / state

கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் மீதான வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு

"சுதந்திரமாக ஒன்று கூடுவதும், கருத்துகளை வெளிப்படுத்துவதும் அனைத்து குடிமக்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமை" என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 1, 2026 at 10:32 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் இஸ்லாமிய சிறுமிகள் பள்ளிக்கு ஹிஜாப் அணிய தடை விதித்தை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கோவை சேலையூர்புரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இதையும் படிங்க.. அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா ஏற்கப்பட்டாலும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் - சபாநாயகர் தரப்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு

இதில் பங்கேற்ற மூன்று பெண்கள் உட்பட 8 நபர்கள் மீது கலவரத்தை தூண்டியது, சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை ரத்து செய்யக்கோரி அப்பாஸ், ஹாரூன், ராதிகா உள்ளிட்ட 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள். காவல் துறை கூறும் குற்றங்கள் எதையும் அவர்கள் செய்யவில்லை" என்று வாதிட்டார்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கீழமை நீதிமன்றத்தில் விசாரணை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், காவல் துறை இறுதி அறிக்கையும் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறி, அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையும் படிங்க.. வீடு புகுந்து 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் கைது

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, "மக்கள் ஒன்று கூடவும், கருத்துக்களை தெரிவிக்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது. ஒன்று கூடி கருத்துக்களை தெரிவிப்பதை போதிய காரணங்கள் இல்லாமல் தடுக்க முடியாது. அது இந்திய அரசியலமைப்பு அனைவருக்கும் தந்துள்ள உரிமை" என்று கூறி கூறி 8 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.