மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மறுப்பா? மத்திய அரசு விளக்கம்
ரூ.63,246 கோடி செலவில் 119 கி.மீ. தூரத்திற்கு சென்னை மெட்ரோ கட்டம்-2 திட்டத்திற்கு அக்டோபர் 3, 2024 அன்று அளித்த ஒப்புதலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Published : November 20, 2025 at 4:16 PM IST
சென்னை: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ள நிலையில், இந்தத் திட்டங்களில் உள்ள முரண்பாடுகளை விளக்கி மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், 'மெட்ரோ கொள்கை 2017-இன் செயலாக்கத்தை, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலாக்கி, பிரச்சனையைக் கிளப்புவது துரதிஷ்டவசமானது. மெட்ரோ ரயில் அமைப்பு முறைகள் போன்ற அதிக செலவிலான உள்கட்டமைப்புத திட்டங்கள் பொதுமக்களுக்கு அதிக பயன்களை உருவாக்குவதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ரூ.63,246 கோடி செலவில் 119 கி.மீ. தூரத்திற்கு சென்னை மெட்ரோ கட்டம்-2 திட்டத்திற்கு அக்டோபர் 3, 2024 அன்று மத்திய அரசு அளித்த ஒப்புதலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார். இது இதுவரை அனுமதிக்கப்பட்ட மிகப்பெரிய மெட்ரோ திட்டமாகும்.
கோயம்புத்தூர் மற்றும் மதுரை திட்டங்களில் பின்வரும் முரண்பாடுகள் உள்ளன
- சென்னை மெட்ரோ அமைப்புமுறையை விட, கோயம்புத்தூரில் குறைந்த வழித்தட நீளத்திற்கு, சென்னையுடன் ஒப்பிடும்போது அதிக போக்குவரத்து கணிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலோட்டமாகப் பார்த்தால் தவறாகத் தெரிகிறது.
- சாலைப் போக்குவரத்திற்கும், மெட்ரோவிற்கும் இடையிலான திட்டமிடப்பட்ட சராசரி பயண தூரம் மற்றும் வேக மாறுபாடுகள், மெட்ரோ அமைப்பு முறைக்கு போக்குவரத்தை மாதிரியாக மாற்றும் எதிர்பார்ப்பை ஆதரிக்கவில்லை.
- கோயம்புத்தூரின் விரிவான திட்ட அறிக்கையின்படி, 7 மெட்ரோ நிலைய இடங்களில் போதுமான வழிகள் இல்லை.
- மதுரையின் விரிவான போக்குவரத்துத் திட்டம் (பத்தி 5.2.5), தற்போதைய பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, பேருந்து விரைவு போக்குவரத்து அமைப்புமுறை நியாயமானது என்பதை தெளிவுபடுத்துகிறது.
- கோயம்புத்தூர் நகராட்சி மக்கள்தொகை (257 சதுர கி.மீ ) பரப்பளவில் 15.85 லட்சம் மக்கள்தொகை (2011) மற்றும் உள்ளூர் திட்டமிடல் பகுதி (1287 சதுர கி.மீ) 7.7 லட்சம் மக்கள்தொகையை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு) கொண்டுள்ளது. உள்ளூர் திட்டமிடல் பகுதிக்குள் மாதிரி மாற்றங்களுக்கு பயணிகள் எண்ணிக்கை கணிப்புகள் செய்யப்படுகின்றன, இது கோவை நகராட்சி பகுதியை விட ஐந்து மடங்கு பெரியது. மெட்ரோ அமைப்பு முறைக்கு மாற்றுவதற்கான இந்த திட்டம் சீரமைக்கப்பட வேண்டும்.
| இதையும் படிங்க: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி - 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! |
மேலும், பல்வேறு நகரங்களில் 10,000 குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்து சேவையின் நன்மையைப் பயன்படுத்த வேண்டாம் என்று அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், பேருந்துகள், பணிமனைகள் போன்ற உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்கு மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது. பலமுறை வற்புறுத்தப்பட்ட போதிலும், தமிழ்நாடு அரசு இதுவரை இந்தத் திட்டத்தில் பங்கேற்கவில்லை' என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

