அண்ணா, காமராஜராக நல்லகண்ணுவை பார்க்கிறேன் - ரஜினிகாந்த் புகழஞ்சலி
ஓமந்தூரார், அறிஞர் அண்ணா, காமராஜர், கக்கனை தான் பார்க்கவில்லை எனவும், அவர்கள் அனைவரையும் சேர்த்து நல்லகண்ணுவை பார்க்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.

Published : February 26, 2026 at 10:27 AM IST
|Updated : February 26, 2026 at 11:42 AM IST
சென்னை: தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) நேற்று காலமானார். அதனைத் தொடர்ந்து, நல்லகண்ணு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நல்லகண்ணுவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தமிழ் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “ஓமந்தூரார், அறிஞர் அண்ணா, காமராஜர், கக்கனை நான் பார்க்கவில்லை. அவர்கள் அனைவரையும் சேர்த்து நல்லகண்ணுவை பார்க்கிறேன்.
| இதையும் படிங்க: மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்தவர் நல்லகண்ணு - ரஜினி புகழாரம் |
நல்லவராக , நேர்மையாக இருந்தால் மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு நல்லகண்ணு. பெரிய ஆத்மா, தோழர் நல்லகண்ணு ஐயாவுக்கு வீரவணக்கம்” என்று புகழாரம் சூட்டினார்.

