ETV Bharat / state

சாலையோர தடுப்பு சுவர் மீது ஹாயாக படுத்திருந்த சிறுத்தை: அச்சத்தில் பயணிகள்

வனப்பகுதி சாலைகளில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவதால் வாகனங்களில் செல்வோர் வாகனத்தை விட்டு கீழே இறங்கக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையோர தடுப்பு சுவர் மீது ஹாயாக படுத்திருந்த சிறுத்தை
சாலையோர தடுப்பு சுவர் மீது ஹாயாக படுத்திருந்த சிறுத்தை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 23, 2026 at 6:52 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் சாலையோர தடுப்பு சுவர் மீது படுத்திருந்த சிறுத்தையின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப் பாதையில் அவ்வப்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று அதிகாலை திம்பம் மலைப்பாதை 12 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச்சுவர் மீது ஒரு சிறுத்தை ஹாயாக படுத்திருந்தது. இதை அவ்வழியாக காரில் சென்றவர்கள் சிறுத்தை படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்ட சிறுத்தை அதை பொருட்படுத்தாமல் சிறிது நேரம் படுத்திருந்தது.

பின்னர் மெதுவாக எழுந்து வனப்பகுதிக்குள் தாவி குதித்து ஓடியது. மலைப்பாதை ஓரத்தில் சிறுத்தை படுத்திருந்ததை கண்ட பயணிகள் அச்சமடைந்தனர். இந்த சம்பவத்தை அப்பகுதியில் வந்த சுற்றுலா பயனிகள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வனப்பகுதி சாலைகளில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவதால் வாகனங்களில் செல்வோர் வாகனத்தை விட்டு கீழே இறங்கக் கூடாது, வனவிலங்குகளின் அருகே வாகனத்தை நிறுத்தக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வெளியான இறுதி வாக்காளர் பட்டியல்; தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1,455 சதுர கிமீ பரப்பளவு கொண்ட வனப்பகுதியாகும். இந்த புலிகள் காப்பகத்தை சத்தியமங்கலம், ஆசனூர் என கோட்டங்களாகப் பிரித்து சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, டிஎன்பாளையம், தலமலை, கேர்மாளம், கடம்பூர், தாளவாடி, ஆசனூர் மற்றும் ஜீரஹள்ளி ஆகிய 10 சரகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகளின் முக்கிய வழித்தடமாக குத்தியாலத்தூர், தலமலை வனப்பகுதி அமைந்துள்ளதால் வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன. குறிப்பாக, திம்பம் மலைப்பாதை பகுதி நீர் நிறைந்த பசுமையான சூழல் கொண்ட பகுதி என்பதால் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.