நீலகிரி மாவட்டத்தில் 5,47,133 வாக்காளர்கள்
கடந்த 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களை விட 14,087 வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

Published : February 23, 2026 at 5:40 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் இன்று வெளியிட்டார். இந்த பட்டியலில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 5,47,133 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 14,057 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள்.
நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி 01.01.2026 ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றது. பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிட்டார்.
இந்த பட்டியலின் படி, நீலகிரி மாவட்டத்தில் தற்போது 2,61,317 ஆண் வாக்காளர்களும், 2,85,791 பெண் வாக்காளர்களும், 25 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 5,47,133 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களை விட 14,087 வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
1. உதகை சட்டமன்ற தொகுதி
ஆண்கள் - 89,066 (+2122 அதிகம்)
பெண்கள் - 98,348 (+2678)
3-ம் பாலினத்தவர்கள் - 11 (+1)
மொத்தம் 1,87,425 (+4801)
2. கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதி
ஆண்கள் - 89,206 (+2917 கூடுதல்)
பெண்கள் - 94,675 (+3167)
3-ம் பாலினத்தவர்கள் - 7 (+4)
மொத்தம் 1,83,888 (+6088)
3. குன்னூர் சட்டமன்ற தொகுதி
ஆண்கள் - 83,045 (+1519 கூடுதல்)
பெண்கள் - 92,768 (+1647)
3-ம் பாலினத்தவர்கள் - 7(+2)
மொத்தம் 1,75,820 (+3168)
இதனையடுத்து மூன்று தொகுதிகளிலும் சேர்த்து ஆண் வாக்காளர்கள் 2,61,317 (+6558), பெண் வாக்காளர்கள் 2,85,791 (+7492), மூன்றாம் பாலினத்தவர்கள் 25 (+7) என மொத்தம் 5,47,133 (+14057) வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்.

