ETV Bharat / state

சாலையோரம் வசிக்கும் குடும்பங்களுக்காக 462 அடுக்குமாடி குடியிருப்புகள் - பேரவையில் அமைச்சர் ராஜ்குமார் வெளியிட்ட அறிவிப்புகள்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பாக அத்துறையின் அமைச்சர் ப.ராஜ்குமார் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ப.ராஜ்குமார்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ப.ராஜ்குமார் (Screengrab from YT / @ Tamil Nadu Assembly)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 28, 2026 at 8:08 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: பெரம்பூர் மற்றும் இதர பகுதிகளில் சாலையோரங்களில் வசிக்கும் மற்றும் ஏழை, எளிய வீடற்ற குடும்பங்களுக்காக 462 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.111.08 கோடி மதிப்பில் கட்டப்படும் என அமைச்சர் ப.ராஜ்குமார் அறிவித்தார்.

2026-27 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், கோரிக்கை எண் 26இன் கீழ் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 28) தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்றது.

அப்போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பாக அத்துறையின் அமைச்சர் ப.ராஜ்குமார் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவை:

  • சுயநிதி திட்டத்தின் கீழ் 842 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.914 கோகாடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • மனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 564 மானைகள் ரூ. 45 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • வாரிய வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் 20 குடியிருப்புகள் ரூ. 18 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • தவணை முறை திட்டத்தில் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்க அபராத வட்டி தள்ளுபடி திட்டம்.
  • நில உபயோக மாற்ற விண்ணப்பங்களுக்கான முழுமையான இணையவழி செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும்.
  • சுய சான்றிதழ் மூலம் வழங்கப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கான பரப்பளவு 5 ஆயிரம் சதுர அடியாக உயர்த்தப்படும்.
  • சிறிய வணிகக் கட்டிடங்களுக்கு சுய சான்றளிப்பு மூலம் திட்ட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
  • குடியிருப்பு கட்டிடங்களுக்கு மூன்றாம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
  • வணிகக் கட்டிடங்களுக்கு மூன்றாம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
  • SIDCO, SIPCOT, ELCOT மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிற்சாலை மனைப்பிரிவுகளில் அமையும் தொழிற்சாலை கட்டடங்களுக்கு மூன்றாம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
  • குடியிருப்பு கட்டட அனுமதிக்கான கூடுதல் அதிகாரப் பகிர்வு உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படும்.
  • உள்ளாட்சிகளுக்கு வணிக கட்டட அனுமதிக்கான கூடுதல் அதிகாரப் பகிர்வு.
  • திட்டமில்லாப் பகுதிகளில் நன்செய் நிலங்களை வேளாண்மை அல்லாத பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்படும்.
  • மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைகள் (TDR) பரிவர்த்தனைக்கான மின்னணு இணையவழித் தளம் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
  • சாத்தங்காடு இரும்பு மற்றும் எஃகு சந்தை வளாகம் மற்றும் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் பணிகள் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
  • கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் கூடுதல் கடைகள் ரூ. 7.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி கடைகளுக்கு குடிநீர் இணைப்பு ரூ. 10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள 20 திட்டப்பகுதிகளில் சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து புதிதாக 12,648 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும்.
  • சென்னை பெரம்பூரில் சாலையோரங்கள், இதர பகுதிகளில் வாழும் குடும்பங்கள் மற்றும் ஏழை எளிய வீடற்ற குடும்பங்களுக்காக 462 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ. 111.08 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின்கீழ் நில உரிமை கொண்ட, பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்காக 15,000 தனி வீடுகள் கட்டப்படும்.
  • அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதிகளில் 41,664 குடியிருப்புகளில் பழுது பார்த்தல், புனரமைத்தல் மற்றும் சமூக வசதிகள் ரூ. 96.63 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ரூ. 355 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு ஒருங்கிணைந்த வாழ்விட மின் மேலாண்மை தளம் (Tamil Nadu Integrated Smart Habitat Management Platform) ரூ. 75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
  • ஒருமுறை கடன் தீர்வுத் திட்டம் மூலம் தவணைத் தொகை செலுத்த தவறிய முதன்மைச் சங்க உறுப்பினர்களின் வட்டித்தொகை தள்ளுபடி.
  • முதன்மை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் செயல்பாடுகளை பொதுமக்களுக்கு விரைவாக கொண்டு சேர்க்கும் விதமாக இணையதளம் மற்றும் செயலி உருவாக்குதல்.
  • சென்னைப் பெருநகரப் பகுதியில் டிஜிட்டல் மீட்டர் உள்ளடக்கிய ஆட்டோ, டாக்ஸி செயலி அறிமுகப்படுத்தப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி டிரைவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நியாயமான பயணத்தொகையை உறுதி செய்யவும் இது உதவியாக இருக்கும்.
  • விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகர பகுதியில் (5,904 சதுர கிமீ) சாலை வலையமைப்பு திட்டம் (Grid of Roads) ரூ. 12 கோடி மதிப்பீட்டில் தயார் செய்யப்படும்.