ETV Bharat / state

ஆகஸ்ட் மாதத்தில் சென்னை மெட்ரோவில் 1.04 கோடி பேர் பயணம்

அதிகபட்சமாக ஆகஸ்ட் 14 அன்று 4,01,607 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் - கோப்புப்படம்
சென்னை மெட்ரோ ரயில் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 1, 2026 at 7:48 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் 1.04 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.

இதையும் படிங்க.. சென்னையில் 11 குளிர்சாதன வசதி கொண்ட நவீன பேருந்து நிறுத்தங்கள் அமைக்க திட்டம்

அந்த வகையில் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,04,04,098 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக ஆகஸ்ட் 14 அன்று 4,01,607 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2026 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 52,84,196 பயணிகள் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி டிக்கெட் பெற்று மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அவர்களில், ஒற்றை பயணத்திற்கான காகித கியூஆர் மூலம் மூலம் 20,20,687 பேரும், ஆன்லைன் கியூஆர் மூலம் 1,56,385 பேரும், ஸ்டேடிங் கியூஆர் மூலம் 2,28,732 பேரும் பயணம் செய்துள்ளனர்.

இதேபோன்று வாட்ஸ்அப் மூலம் 4,69,198 பேரும், பேடிஎம் மூலம் 3,09,569; ஓஎன்டிசி மூலம் 12,47,168 பேரும்; போன் பே மூலம் 2,73,438 பேரும்; சிஎம்ஆர்எல் மொபைல் செயலி மூலம் 1,04,251 பேரும்; சென்னை ஒன் செயலி மூலம் 3,10,474 பேரும் பதிவு செய்து மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

டிஜிட்டல் எஸ்விபி, கியூஆர் குறியீடு பயணச்சீட்டு, வாட்ஸ் அப், பேடிஎம் செயலி, போன்பே செயலி மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்றவற்ற்றை பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 20 சதவீத கட்டண தள்ளுபடியை வழங்குகிறது.

இதையும் படிங்க.. காங்கிரஸ் அமைச்சரை கிண்டல் செய்த உதயநிதி: குலுங்கி குலுங்கி சிரித்த சபாநாயகர்

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித கியூஆர் பயணச்சீட்டுகளுக்கு இந்தத் தள்ளுபடி கிடையாது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.