வைபவ் சூர்யவன்ஷி அதிரடி பேட்டிங்; துலீப் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கிழக்கு மண்டலம்!
இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி கிழக்கு மண்டல அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


Published : September 1, 2026 at 5:13 PM IST
பெங்களூரு: துலீப் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில், மத்திய மண்டல அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கிழக்கு மண்டல அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் புகழ்பெற்ற தொடரான துலீப் கோப்பை (2026–27) போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தொடரின் அரையிறுதிச் சுற்றுப் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. இதில், முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் மத்திய மண்டல அணியை எதிர்த்து, கிழக்கு மண்டல அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மத்திய மண்டல அணி தனது முதல் இன்னிங்ஸில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ரிங்கு சிங் 60 ரன்களையும், ஆர்யன் ஜூயல் 46 ரன்களையும் சேர்த்தனர். கிழக்கு மண்டல அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகேஷ் குமார் மற்றும் அபிஜித் சர்க்கார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
5️⃣0️⃣s
— BCCI Domestic (@BCCIdomestic) September 1, 2026
Wickets ⚡
Comebacks 🔄
Scores level ⚖️
Drama 🍿
Harsh Dubey and Abhimanyu Easwaran take us through the roller-coaster that was Day 2 and what to expect on Day 3 in Central Zone vs East Zone 🎢 - By @jigsactin #DuleepTrophy | #CZvEZ pic.twitter.com/D5EigFxEz6
பின்னர், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய கிழக்கு மண்டல அணியில் தொடக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி 92 ரன்களையும், அபிமன்யு ஈஸ்வரன் 69 ரன்களையும் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதனால் கிழக்கு மண்டல அணியும் தனது முதல் இன்னிங்ஸில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மத்திய மண்டல அணி தரப்பில் ஹர்ஷ் துபே 4 விக்கெட்டுகளையும், ஆர்யன் பாண்டே மற்றும் யாஷ் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில், இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்ஸில் ஒரே மாதிரியான ரன்களை (266) எடுத்து சமனில் முடிப்பது இதுவே முதல்முறையாகும். இதையடுத்து, முன்னிலை ஏதுமின்றி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய மண்டல அணி பேட்டர்கள், மீண்டும் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதிலும் அந்த அணியின் அமன் மோக்டே 41 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்களில் எவரும் 30 ரன்களைக் கூட எட்ட முடியாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால், மத்திய மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிழக்கு மண்டல அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
4⃣,6⃣,4⃣,4⃣, 🇼
— BCCI Domestic (@BCCIdomestic) September 1, 2026
Vaibhav Sooryavanshi 🆚 Yash Thakur battle part 2⃣ 🔥#DuleepTrophy | #CZvEZ
Scorecard ▶️ https://t.co/kyExeix2VY pic.twitter.com/wX8L5AHdTB
அதன்பின், 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கிழக்கு மண்டல அணிக்கு, மீண்டும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். இதில் வைபவ் சூர்யவன்ஷி 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் இஷான் கிஷன் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த இஷான் கிஷன் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 39 ரன்களையும், முகமது ஷமி 8 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன் மூலம் கிழக்கு மண்டல அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மத்திய மண்டல அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது.
East Zone are into the final 👏
— BCCI Domestic (@BCCIdomestic) September 1, 2026
Mohd. Shami hits the winning runs 👌
They beat defending champions Central Zone by 4⃣ wickets 🙌#DuleepTrophy | #CZvEZ
Scorecard ▶️ https://t.co/kyExeix2VY pic.twitter.com/yzYIVMctVH
இதையும் படிங்க: |
மேலும், இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி கிழக்கு மண்டல அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த அசத்தல் வெற்றியின் மூலம் துலீப் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்புடன் கிழக்கு மண்டல அணி இறுதிப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

