WPL 2026: டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது ஆர்சிபி
மும்பை அணியில் நாட் ஸ்கைவர், அமெலியா கெர், ஷப்னிம் இஸ்மையில், நிகோலா கேரி ஆகியோருக்கும், ஆர்சிபி அணியில் கிரேஸ் ஹாரிஸ், நதின் டி கிளார்க், லின்ஸி ஸ்மித், லாரன் பெல் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Published : January 9, 2026 at 7:31 PM IST
நவி மும்பை: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் முனைப்பில் மகளிர் பிரீமியர் லீக் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இதில் 3 சீசன்கள் முடிவடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு முறையும் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளன. இதனையடுத்து இந்த தொடரின் நான்காவது சீசன் இன்று (ஜனவரி 9) முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
அந்தவகையில் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து முன்னாள் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
🚨 Toss 🚨@RCBTweets won the toss against @mipaltan in the season opener and elected to bowl first.
— Women's Premier League (WPL) (@wplt20) January 9, 2026
Updates ▶️ https://t.co/IWU1URl1fr#TATAWPL | #KhelEmotionKa | #MIvRCB pic.twitter.com/2pdEsTzdYV
இப்போட்டிக்கான மும்பை அணியில் நாட் ஸ்கைவர், அமெலியா கெர், ஷப்னிம் இஸ்மையில், நிகோலா கேரி ஆகியோருக்கும், ஆர்சிபி அணியில் கிரேஸ் ஹாரிஸ், நதின் டி கிளார்க், லின்ஸி ஸ்மித், லாரன் பெல் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இருப்பதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
பிளேயிங் லெவன்
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஜி கமலினி, அமெலியா கெர், ஹர்மன்பிரீத் கவுர்(கேப்டன்), அமன்ஜோத் கவுர், நிக்கோலா கேரி, பூனம் கெம்னார், ஷப்னிம் இஸ்மாயில், சமஸ்கிருதி குப்தா, சஜீவன் சஞ்ஜனா, சைகா இஷாக்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), கிரேஸ் ஹாரிஸ், தயாளன் ஹேமலதா, ரிச்சா கோஷ் (வ), ராதா யாதவ், நாடின் டி கிளர்க், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், பிரேமா ராவத், லின்ஸி ஸ்மித், லாரன் பெல்.
🪙 The first call of the season goes our way. 🔥🤩
— Royal Challengers Bengaluru (@RCBTweets) January 9, 2026
🫡 Captain Smriti wins the toss and we bowl first in the season opener. 👊
Let’s GO! ❤️🔥#PlayBold #ನಮ್ಮRCB #WPL2026 #MIvRCB @KajariaCeramic pic.twitter.com/iyVoH2QrjI
நேருக்கு நேர்
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இவ்விரு அணிகளும் தலா 7 முறை பலப்பரீட்சை நடத்தியுள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 முறையும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டி.ஒய்.பாட்டில் மைதனாம்
நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் கிரிக்கெட் மைதானம் பெரும்பாலும் பவுலர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு இதுவரை நடைபெற்ற 8 டி20 போட்டிகளில் 2 முறை மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 5 முறை சேஸிங் செய்த அணிகள் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் பவுலிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
Our 𝐗𝐈 for #TATAWPL 2026 opener 🔒#AaliRe #MumbaiIndians #MIvRCB pic.twitter.com/0PGOWw4y5l
— Mumbai Indians (@mipaltan) January 9, 2026
இதையும் படிங்க |
நேரலை ஒளிபரப்பு
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஜியோ ஹாட் ஸ்டாரிலும் இத்தொடரை ஆன்லைனில் காண முடியும்.

