மகளிர் டி20 ஆசிய கோப்பை 2026 இன்று தொடக்கம் | முழு போட்டி அட்டவணை மற்றும் நேரலை விவரங்கள் இதோ!
மகளிர் டி20 ஆசிய கோப்பை 2026 தொடரின் முழு போட்டி அட்டவணை, குழுக்கள் மற்றும் நேரலை விவரங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.


Published : August 28, 2026 at 3:51 PM IST
ஹைதராபாத்: துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் தாய்லாந்து மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மகளிர் டி20 ஆசிய கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் இன்று (ஆகஸ்ட் 28) முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் டாப்-8 முன்னணி அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் ஹாங்காங் அணிகள் குரூப் ஏ பிரிவிலும்; இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பிடித்துள்ளன.
இதில் இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில், தாய்லாந்து மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதேசமயம், ஆகஸ்ட் 30 அன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, தாய்லாந்து மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
Hello Dubai! 👋#TeamIndia have arrived for the ACC Women's Asia Cup 2026 😎#ACC | #WomensAsiaCup2026 pic.twitter.com/90w7VRAFk6
— BCCI Women (@BCCIWomen) August 27, 2026
கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. லீக் சுற்றுகளின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இந்நிலையில், இத்தொடரின் போட்டி அட்டவணை, இந்திய மகளிர் அணி விவரம், குழுக்கள் மற்றும் நேரலை விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
குழுக்கள்
- குரூப் ஏ: இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங்.
- குரூப் பி: இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா.
நேரலை விவரம்
மகளிர் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சிகளில் நேரலையில் காணலாம். அதேசமயம், இத்தொடரின் அனைத்துப் போட்டிகளையும் சோனி லிவ் ஓடிடி தளத்திலும் குறிப்பிட்ட சந்தாவைச் செலுத்தி இந்திய ரசிகர்கள் நேரலையில் காணலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
A look at #TeamIndia's squad for the upcoming ACC Women's Asia Cup 2026 🙌#ACC | #WomensAsiaCup2026 pic.twitter.com/a7fVxTjMMI
— BCCI Women (@BCCIWomen) August 14, 2026
மைதானம் & போட்டி நேரம்
மகளிர் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்துப் போட்டிகளும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளன. மேலும், போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்குத் தொடங்கும் நிலையில், போட்டிக்கான டாஸ் நிகழ்வு இரவு 7:30 மணிக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tickets for the #DPWorldWomensAsiaCup2026 are now LIVE! Secure your tickets now and be part of the action as the continent's most exciting women's tournament comes to life at the Dubai International Stadium 🎟️#ACC pic.twitter.com/muMCnvbSyn
— AsianCricketCouncil (@ACCMedia1) August 26, 2026
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய மகளிர் அணி
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ஜி. கமாலினி, பார்தி ஃபுல்மாலி, ஸ்ரீ சரணி, ரேணுகா சிங், கிராந்தி கவுட், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், நந்தினி சர்மா.
𝐘𝐨𝐮𝐫 𝐥𝐨𝐜𝐚𝐥 𝐬𝐭𝐚𝐫𝐭 𝐭𝐢𝐦𝐞 𝐠𝐮𝐢𝐝𝐞 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 #𝐃𝐏𝐖𝐨𝐫𝐥𝐝𝐖𝐨𝐦𝐞𝐧𝐬𝐀𝐬𝐢𝐚𝐂𝐮𝐩𝟐𝟎𝟐𝟔 𝐢𝐬 𝐡𝐞𝐫𝐞 ⏰#ACC pic.twitter.com/2uBgZjmp2M
— AsianCricketCouncil (@ACCMedia1) August 28, 2026
ஆசிய கோப்பை போட்டி அட்டவணை
- ஆகஸ்ட் 28 - தாய்லாந்து மகளிர் அணி vs ஹாங்காங் மகளிர் அணி
- ஆகஸ்ட் 29 - இலங்கை மகளிர் அணி vs ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணி
- ஆகஸ்ட் 30 - இந்திய மகளிர் அணி vs தாய்லாந்து மகளிர் அணி
- ஆகஸ்ட் 31 - வங்காளதேச மகளிர் அணி vs இந்தோனேசிய மகளிர் அணி
- செப்டம்பர் 1 - பாகிஸ்தான் மகளிர் அணி vs தாய்லாந்து மகளிர் அணி
- செப்டம்பர் 2 - இலங்கை மகளிர் அணி vs இந்தோனேசிய மகளிர் அணி
- செப்டம்பர் 3 - இந்திய மகளிர் அணி vs ஹாங்காங் மகளிர் அணி
- செப்டம்பர் 4 - ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணி vs இந்தோனேசிய மகளிர் அணி
- செப்டம்பர் 5 - இந்திய மகளிர் அணி vs பாகிஸ்தான் மகளிர் அணி
இதையும் படிக்கவும் |
- செப்டம்பர் 6 - இலங்கை மகளிர் அணி vs வங்காளதேச மகளிர் அணி
- செப்டம்பர் 7 - பாகிஸ்தான் மகளிர் அணி vs ஹாங்காங் மகளிர் அணி
- செப்டம்பர் 8 - வங்காளதேச மகளிர் அணி vs ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணி
- செப்டம்பர் 10 - முதலாவது அரையிறுதிப் போட்டி
- செப்டம்பர் 11 - இரண்டாவது அரையிறுதிப் போட்டி
- செப்டம்பர் 13 - இறுதிப் போட்டி

