டி20 உலகக் கோப்பை 2026: இமாலய வெற்றியின் மூலம் சாதனைகளை குவித்த வெஸ்ட் இண்டீஸ்
டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது அணி என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்தது.


Published : February 24, 2026 at 1:26 PM IST
வான்கடே: வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்று ஆட்டம் நேற்று மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மன் பாவெல் ஆகியோரது அதிரடியான அரைசதம் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மையர் 85 ரன்களையும், ரோவ்மன் பாவெல் 59 ரன்களையும் சேர்த்தனர். ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் ந்ங்கரவா மற்றும் பிளெசிங் முசரபானி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடி ஜிம்பாப்வே அணியில் பிராட் எவான்ஸ் 43 ரன்களை சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
West Indies notch a mammoth win to get up and running in the #T20WorldCup Super 8s 💪
— ICC (@ICC) February 23, 2026
📝: https://t.co/7Anm2l6Cqi pic.twitter.com/eITG3P6gGe
இதனால் அந்த அணி 17.4 ஓவர்களில் 147 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 4 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷிம்ரான் ஹெட்மையர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
அதிக ரன்கள்
இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் சில சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியில் 254 ரன்களை குவித்ததன் மூலம், டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது அணி என்ற சாதனையை படைத்தது. இந்த பட்டியலில் இலங்கை அணியானது 260 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளது.
A fierce batting display from the West Indies for the #T20WorldCup record books 📚
— ICC (@ICC) February 23, 2026
Watch the highlights from their win over Zimbabwe 🎥 https://t.co/flyvHodb2Q pic.twitter.com/vm5vMEYRbT
டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்களை அடித்த அணி
- 260/6 - இலங்கை vs கென்யா, ஜோஹன்னஸ்பர்க், 2007
- 254/6 - வெஸ்ட் இண்டீஸ் vs ஜிம்பாப்வே, வான்கடே, 2026*
- 235/5 - அயர்லாந்து vs ஓமன், கொழும்பு SSC, 2026
- 230/8 - இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா, வான்கடே, 2016
- 229/4 - தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து, வான்கடே, 2016
அதிக சிக்ஸர்கள்
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஒட்டுமொத்தமாக 19 சிக்ஸர்களை விளாசி இருந்தனர். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை அடித்த அணி என்ற நெதர்லாந்தின் சாதனையை வெஸ்ட் இண்டீஸ் சமன் செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிராக நெதர்லாந்து அணி 19 சிக்ஸர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.
A record-breaking night for the West Indies as they cruise to a commanding victory! 🙌🔥
— Star Sports (@StarSportsIndia) February 23, 2026
Up next 👉 ICC Men's #T20WorldCup | SUPER 8 | #ENGvPAK | TUE, 24th FEB, 6 PM pic.twitter.com/A6pySbKiwm
மிகப்பெரிய வெற்றி
இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது. முன்னதாக கடந்த 2024ஆம் ஆண்டு உகாண்டா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருவகிறது.
இதையும் படிங்க |
வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகப்பெரிய வெற்றிகள்
- 134 vs உகாண்டா, பிராவிடன்ஸ், 2024
- 107 vs ஜிம்பாப்வே, வான்கடே, 2026*
- 104 vs ஆஃப்கானிஸ்தான், க்ரோஸ் ஐலெட், 2024
- 84 vs பாகிஸ்தான், மிர்பூர், 2014
- 74 vs ஆஸ்திரேலியா, கொழும்பு, 2012

