ETV Bharat / sports

போர் பதற்றத்தால் முடங்கிய விமான சேவை: இந்தியாவில் சிக்கிய ஜிம்பாப்வே, விண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள்

வான்வெளி இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை பாதிக்கப்பட்ட அணிகள் இந்தியாவிலேயே தங்கியிருக்கவும், அவர்களுக்கான தங்குமிடம் மற்றும் பாதுகாப்புச் செலவுகளை ஐசிசி ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வே vs வெஸ்ட் இண்டீஸ்
ஜிம்பாப்வே vs வெஸ்ட் இண்டீஸ் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 3, 2026 at 3:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற வீரர்கள் மட்டுமின்றி, போட்டி அதிகாரிகள், ஒளிபரப்பு குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்களும் கடுமையான பயண நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.

மத்திய கிழக்கில் ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து சர்வதேச வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலானோர் விமான நிலையங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்சமயம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அணிகளும் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் சூப்பர் 8 சுற்றில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறிய ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தற்சமயம் துபாய் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதால், கரீபியன் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்லும் விமான சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி கொல்கத்தாவிலும், ஜிம்பாப்வே அணி டெல்லியிலும் சிக்கியுள்ளனர்.

இதனையடுத்து தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக மேற்கு ஆசிய வான்வெளியைத் தவிர்த்து, ஐரோப்பா, சிங்கப்பூர் அல்லது பாங்காக் வழியாக மாற்று வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஐசிசி இறங்கியுள்ளது. ஆனாலும் வழித்தட பிரச்சனை, விமான கட்டணங்கள் போன்ற பிரச்சனைகள் புதிய சிக்கல்களை உருவாகியுள்ளன.

மேலும் கிரிக்கெட் வீரர்களைத் தவிர, போட்டி அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் இதேபோன்ற பயண நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த நெருக்கடி வீரர்களின் வெளியேறும் பயணத்தை பாதித்திருந்தாலும், அவர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதே தற்போதைய முன்னுரிமை என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.

மேற்கொண்டு இந்த சூழல் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை பாதிக்கப்பட்ட அணிகள் இந்தியாவிலேயே தங்கியிருக்கவும், அவர்களுக்கான தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை ஐசிசி வழங்கும் என்றும் அறிவித்துள்ளது. இதுதவிர டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி மார்ச் 4ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும், மார்ச் 5ஆம் தேதில் மும்பையில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதையும் படிங்க

அதனைத் தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது. அதேசமயம், இந்த விமான சேவை பாதிப்பு காரணமாக மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களின் வருகை பெரும் சவாலாக மாறியுள்ளது.