ETV Bharat / sports

பயிற்சியை விட்டு வீடு திரும்பிய ரிங்கு சிங்? பின்னடைவை சந்திக்கும் இந்தியா

ஜிம்பாப்வே போட்டிக்கு முன் ரிங்கு சிங் அணியில் இணையாவிட்டால், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிங்கு சிங்
ரிங்கு சிங் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 24, 2026 at 10:58 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முக்கியமான சூப்பர் 8 போட்டிக்கு முன்னதாக, இந்திய அணி வீரர் ரிங்கு சிங் பயிற்சியில் பங்கேற்காமல் அவசரமாக வீடு திரும்பியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட நிலையில், அந்த போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி காரணமாக இந்திய அணியின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

இதனையடுத்து பிப்ரவரி 26ஆம் தேதி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் வாழ்வா, சாவா ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது மட்டுமில்லாமல், அதிக ரன் ரெட்டை பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் சென்னையில் தங்களுடைய பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இந்திய அணி வீரர் ரிங்கு சிங் பயிற்சியில் பங்கேற்காமல் அவசரமாக வீடு திரும்பியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவசரநிலை கருதி அவர் உடனடியாக வீடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் ரிங்கு சிங் விளையாடுவது தற்போது பெரும் சந்தேகமாக மாறிவுள்ளது. ஒருவேளை போட்டிக்கு முன்னதாக ரிங்கு சிங் அணியில் இணையாவிட்டால், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பிசிசிஐ தரப்பில் இருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகமான ரிங்கு சிங் இதுவரையிலும் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 3 அரைசதங்கள் உள்பட 665 ரன்களை சேர்த்துள்ளார். இதில் அவர் 55 பவுண்டரிகளையும், 38 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். இந்த அணி மிக முக்கியமான போட்டியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், ரிங்கு சின் அவசரமாக வீடு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் படேல் (துணை கேப்டன்), இஷான் கிஷான், ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ்