டி20 உலகக் கோப்பை 2026: ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெற்றி பயணத்தை தொடரும் தென்னாப்பிரிக்கா
ஜிம்பாப்வே அணி தோல்வியை தழுவிய நிலையிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.


Published : March 1, 2026 at 7:02 PM IST
டெல்லி: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக மருமணி மற்றும் பிரையன் பென்னெட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மருமணி 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, பிரையன் பென்னெட் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தியான் மேயர்ஸும் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ரஸா ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய ரியான் பார்ல், டோனி மியங்கா உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
Sikandar Raza is unstoppable 👊
— ICC (@ICC) March 1, 2026
The Zimbabwe skipper goes through his opposite number Aiden Markram with a peach!#T20WorldCup broadcast details ➡️ https://t.co/NPykWM7qqY pic.twitter.com/EmK1ACNPSX
அதேசமயம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சிக்கந்தர் ரஸா அரைசதம் கடந்து அசத்தியதுடன், 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 73 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய வீரார்களில் கிளைவ் மடாண்டே 26 ரன்களை சேர்க்க ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்த்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் குவேனா மபாகா, கார்பின் போஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 4 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரியான் ரிக்கெல்டன் மற்றும் டெவால்ட் பிரேவிஸ் இணை சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர்.
South Africa extend their unbeaten run in the 2026 #T20WorldCup with a comfortable victory over Zimbabwe 👏
— ICC (@ICC) March 1, 2026
📝: https://t.co/TFO4Y1Unna pic.twitter.com/qfxXFYQhmA
இதில் ரியான் ரிக்கெல்டன் 4 சிக்ஸர்களுடன் 31 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லரும் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் அரைசதம் அடிபபர் என்று எதிர்பார்க்கப்பட்ட டெவால்ட் பிரேவிஸ் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 42 ரன்களை சேர்த்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இதையும் படிங்க |
இறுதியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 ரன்களையும், ஜார்ஜ் லிண்டே 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியேசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி தோல்வியை தழுவிய நிலையிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

