ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை 2026: விராட் கோலி சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்

டி20 உலக கோப்பை தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 2, 2026 at 5:52 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டி நேற்று கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 40 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 37 ரன்களையும், ரோவ்மன் பாவெல் 34 ரன்களையும் சேர்த்தனர்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 97 ரன்களை குவித்து அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் சில சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.

கோலி சாதனை முறியடிப்பு

அந்த வகையில் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் 97 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருந்தார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சேஸிங்கின் போது அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார். முன்னதாக விராட் கோலி 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 84 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார்.

இரண்டாவது இந்தியர்

இது தவிர இந்த ஆட்டத்தின் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக கடந்த 2010 ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் சுரேஷ் ரெய்னா 101 ரன்களை எடுத்ததே இதுநாள் வரை சாதனையாக இருக்கும் நிலையில், சஞ்சு சாம்சன் 97 ரன்களை குவித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் (ஒரு இன்னிங்ஸில்)

  • 101-சுரேஷ் ரெய்னா vs தென்னாப்பிரிக்கா, கிராஸ் ஐலேட் 2010
  • 97*-சஞ்சு சாம்சன் vs வெஸ்ட் இண்டீஸ், ஈடன் கார்டன்ஸ் 2026
  • 92 -ரோஹித் சர்மா vs ஆஸ்திரேலியா, கிராஸ் ஐலேட் 2024
  • 89*-விராட் கோலி vs வெஸ்ட் இண்டீஸ், வான்கடே 2016
  • 84*-சூர்யகுமார் யாதவ் vs அமெரிக்கா, வான்கடே 2026

அதிகபட்ச சேஸிங்

இந்த போட்டியில் இந்திய அணி 196 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியதன் மூலம், டி20 உலகக் கோப்பை தொடரில் தங்களது அதிகபட்ச சேஸிங்கையும் பதிவு செய்துள்ளது. முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 173 ரன்கள் என்ற இலக்கை எட்டியதே இந்திய அணியின் சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் அது முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி சேஸிங் செய்த அதிகபட்ச இலக்கு (டி20 உலகக் கோப்பையில்)

  • 196 vs வெஸ்ட் இண்டீஸ், கொல்கத்தா, 2026
  • 173 vs தென்னாப்பிரிக்கா, மிர்பூர், 2014
  • 161 vs ஆஸ்திரேலியா, மொஹாலி, 2016
  • 160 vs பாகிஸ்தான், மெல்போர்ன், 2022
  • 142 vs வங்கதேசம், தாக்கா, 2014

இதையும் படிங்க

இது தவிர இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம் 6ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் அதிகமுறை அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் என்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 6 முறை அரையிறுதிக்கு முன்னேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.