ETV Bharat / sports

ஐபிஎல் 2026: ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்?

ஏற்கெனவே மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், சூர்யகுமாரும் விலகுவது அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : May 6, 2026 at 9:10 PM IST

2 Min Read
Choose ETV Bharat

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வரையிலும் 48 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியானது 13 புள்ளிகளை பெற்று தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 12 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

மறுபக்கம் அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடைசி இடத்திலும், ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியான மும்பை இந்தியன்ஸ் 9ஆம் இடத்திலும் உள்ளன. இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் குறித்து நினைக்க முடியும் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது அடுத்த லீக் போட்டியில் பலம்பொருந்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்த போட்டி ராய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் விளையாடமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தற்சமயம் ராய்ப்பூர் சென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் குழுவுடனும் சூர்யகுமார் யாதவ் பயனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்பதும் உறுதியாகியுள்ளது.

முன்னதாக அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத நிலையில் சூர்யகுமார் யாதவ் அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தார். ஆனால் தற்சமயம் ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியை பெறாத நிலையில், சூர்யகுமார் யாதவும் போட்டியில் இருந்து விலகினால், மும்பை இந்தியன்ஸ் அணியை யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்விகளும் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்கவும்

இருப்பினும் சூர்யகுமார் இல்லாத பட்சத்தில், அணியை வழிநடத்தும் பொறுப்பு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும், அப்படி இல்லையெனில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவே அணியை வழிநடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மும்பை - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி மீது தற்போதிலிருந்தே எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.