சிங்கப்பூர் ஓபன்: சிந்து, லக்ஷ்யா, சாத்விக்-சிராக், கபிலா-கிராஸ்டோ ஜோடி காலிறுதிக்கு முன்னேறி சாதனை
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 18-21, 21-16, 15-21 என்ற கணக்கில் சிங்கப்பூர் வீரர் லோ கீன் யூவிடம் போராடி தோல்வியடைந்தார்.


Published : May 28, 2026 at 5:18 PM IST
ஹைதராபாத்: இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் பி.வி. சிந்து, சாத்விக்-சிராக் ஜோடி, கபிலா-கிராஸ்டோ ஜோடி மற்றும் லக்ஷ்யா சென் ஆகியோர் அபார வெற்றியை பதிவு செய்து சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் எச்.எஸ்.பிரனாய், சிங்கப்பூரைச் சேர்ந்த நட்சத்திர வீரர் லோ கீன் யூ-வை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு
இதில் முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் கீன் யூ முதல் செட்டை வென்று அசத்தினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட பிரனாய் 21-16 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி கம்பேக் கொடுத்தார். இதன் காரணமாக போட்டியின் முடிவு மூன்றாவது செட்டை நோக்கி சென்றது.
Into the Quarterfinals! 🇮🇳
— BAI Media (@BAI_Media) May 28, 2026
Lakshya Sen moves into the QFs at the Singapore Open after Kunlavut Vitidsarn retired early in the first game (2-0). Wishing Kunlavut a speedy recovery!
Let's keep the momentum going, Lakshya! 🏸🔥
📸 @badmintonphoto pic.twitter.com/elPbONbQh5
இதனால் இருவரும் வெற்றிக்காக கடுமையாக போராடினர். இறுதியில் கீன் யூ 21-15 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி பிரனாய்க்கு அதிர்ச்சி கொடுத்தார். இதன் மூலம் எச்.எஸ்.பிரனாய் 18-21, 21-16, 15-21 என்ற செட் கணக்கில் லோ கீன் யூ-விடம் தோல்வியைத் தழுவி காலிறுதிக்கு முன்னேறு வாய்ப்பை இழந்தார்.
மற்றொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், தாய்லாந்தைச் சேர்ந்த குன்லவுட் விடித்சர்னை எதிர்கொண்டார். இந்த போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே தாய்லாந்து வீரர் காயத்தால் விலகியதால், லக்ஷ்யா சென் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேறியும் அசத்தியுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு
அதேசமயம் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் ரிகோ குஞ்ஜியை (Riko Gunji) எதிர்கொண்டார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-09, 21-12 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானிய வீராங்கனையை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
Making sure there’s a clear path.
— BWF (@bwfmedia) May 28, 2026
Follow live action: https://t.co/TjoFnU4PnB@HSBC_Sport#BWFWorldTour #SingaporeOpen2026 pic.twitter.com/kvqHRouJPX
ஆடவர் இரட்டையர் பிரிவு
இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, சீன தைபேயின் லீ ஜே-ஹூய், யாங் கோ-ஹ்சுவானை எதிர்கொண்டனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் இந்திய ஜோடி கைப்பற்றி அசத்தியது.
அதன்பின் நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் கம்பேக் கோடுத்து சீன தைபே இணை 21-18 என்ற கணக்கில் செட்டை வென்று பதிலடி கொடுத்தனர். இதனால் இந்த போட்டி மூன்றாவது செட்டை நோக்கி சென்றது. மூன்றாவது செட் ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 21-18 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி அசத்தினர்.
இதன் மூலம் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 11-21, 21-18 என்ற கணக்கில் சீன தைபேயின் லீ ஜே-ஹூய், யாங் கோ-ஹ்சுவானை கடுமையான போராட்டத்திற்கு பிறகு வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், காலிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளனர்.
Backhand art in motion. ⚡️
— BWF (@bwfmedia) May 28, 2026
Follow live action: https://t.co/TjoFnU5nd9@HSBC_Sport#BWFWorldTour #SingaporeOpen2026 pic.twitter.com/B1TorZawiF
கலப்பு இரட்டையர் பிரிவு
இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் துருவ் கபிலா - தனிஷா கிராஸ்டோ இணை, ஜப்பானின் மாயா தகுச்சி, யுடா வதனாபேவ் இணையை எதிர்கொண்டனர். இதில் முதல் செட் ஆட்டத்தை இந்திய இணை 21-08 என்ற கணக்கில் இழந்து ஏமாற்றமளித்தது. அதன்பின் நடைபெற்ற இரண்டாவது செட்டை 21-17 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய இணை கம்பேக் கொடுத்தனர்.
இதையும் படிக்கவும் |
பின்னர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட கபிலா மற்றும் கிராஸ்டோ இணை மூன்றாவது செட்டையும் 21-16 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினர். இதன் மூலம் துருவ் கபிலா - தனிஷா கிராஸ்டோ ஜோடி 08-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் ஜப்பானிய ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், காலிறுதிக்கு முன்னேறியும் அசத்தியுள்ளனர்.

