நியூசிலாந்து ஒரு நாள் தொடர்: முதல் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்கள்
இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளும் காணொளி மற்றும் புகைப்படங்களை பிசிசிஐ தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

Published : January 9, 2026 at 8:56 PM IST
வதோதரா: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் பரோடா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தங்களுடைய பயிற்சிகளை தொடங்கினர்.
நியூசிலாந்து அணி இந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரானது ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜனவரி 21 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து இந்த தொடர்களுக்கான இருநாட்டு அணிகளையும் அந்ததந்த கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்திருந்தன. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜனவரி 11ஆம் தேதி வதோதராவில் உள்ள பரோடா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தங்களைத் தயார்ப்படுத்தி வருகின்றனர்.
Touchdown ✈️ Vadodara
— BCCI (@BCCI) January 9, 2026
Preps underway as #TeamIndia gear up for their first challenge of 2026 👊#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/ryykzbrNCR
அதன் ஒருபதியாக இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் பரோடா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி மற்றும் புகைப்படங்களை பிசிசிஐ தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இதனையடுத்து அந்த புகைப்படங்கள் மற்றும் காணொளியானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நீண்ட நேரம் பயிற்சி மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இருவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், தற்சமயம் நியூசிலாந்துக்கு எதிராகவும் தங்களது ஃபார்மை தொடர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அவர்களுடன் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரை தவறவிட்டிருந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் தங்களின் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். இருவரது உடற்தகுதி குறித்தும் சந்தேகங்கள் இருந்த நிலையில், தற்சமயம் அவர்கள் முழு உடற்தகுதியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருவது இந்திய அணிக்கு சாதகமான விசயமாக பார்க்கப்படுகிறது.
New year, fresh start 💪
— BCCI (@BCCI) January 9, 2026
📸 Glimpses from #TeamIndia's first training session in Vadodara ahead of the #INDvNZ ODIs 👌@IDFCFIRSTBank pic.twitter.com/itTwA5fKDF
இந்திய ஒருநாள் அணி: ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ரானா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
நியூசிலாந்து ஒருநாள் அணி: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதித்யா அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவான் கான்வே, ஜக்காரி ஃபால்க்ஸ், மிட்செல் ஹேய், கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.

