ETV Bharat / sports

ராஜஸ்தான் பவுலர்களை எளிதாக சமாளித்த சுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி - பல்வேறு சாதனைகள் முறியடிப்பு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சுப்மன் கில், ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் அதிவேக சதம், அதிவேக சதம் அடித்த கேப்டன் என பல சாதனைகளை படைத்துள்ளார்.

சுப்மன் கில், சாய் சுதர்சன்
சுப்மன் கில், சாய் சுதர்சன் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2026 at 8:51 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சண்டிகர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான குவாலிஃபயர் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சுப்மன் கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

ராஜஸ்தான் அணியின் 215 என்ற இமாலய இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் தூணாக நின்று ரன்கள் சேர்த்தார். இவர் 53 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்ததுடன் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

நேற்று சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். மேலும் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் அதிவேக சதம் அடித்த கேப்டன் என்ற சாதனையையும் தன் வசப்படுத்தியுள்ளார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 5 சதங்கள் அடித்துள்ள சுப்மன் கில், பிளே ஆஃப் சுற்றில் 2வது சதத்தை பதிவு செய்துள்ளார்.

முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றில் மும்பை அணிக்கு எதிராக சதம் அடித்தார். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஐபிஎல் சீசன்களில் 700க்கும் அதிகமான ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் கிறிஸ் கெயில், கோலி, சாய் சுதர்சன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடர் முழுவதும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். அந்த வகையில், நேற்றும் இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 167 ரன்கள் சேர்த்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது. மேலும் இந்த ஜோடி பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. கில், சுதர்சன் இணைந்து இதுவரை 48 ஐபிஎல் இன்னிங்ஸில் 11க்கும் அதிகமான முறை 100க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளனர். மேலும் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் முதல் விக்கெட்டிற்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடர் தோல்வி எதிரொலி: லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் ரிஷப் பந்த்

சண்டிகரில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் குவித்தது. அந்த அணியின் இளம் நட்சத்திரம் சூர்யவன்ஷி அதிகபட்சமாக 96 ரன்கள் குவித்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி கில் (104), சாய் சுதர்சன் (58) அபார ஆட்டம் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம், ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற குஜராத் அணி, நாளை(மே 31) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.