டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பவுலிங் தேர்வு; சேப்பாக்கில் களமிறங்கும் சஞ்சு சாம்சன்
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.


Published : February 26, 2026 at 6:43 PM IST
சென்னை: இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி மிதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் ஏற்கெனவே குரூப் 2ல் இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், நியூசிலாந்தும் ஏறத்தாழ அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மறுபக்கம் குரூப் 1ல் எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
அதன்படி, இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது. சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது.
🚨 Toss 🚨#TeamIndia have been asked to bat first in their second Super 8 Fixture!
— BCCI (@BCCI) February 26, 2026
Updates ▶️ https://t.co/p4GxtxGkBf#T20WorldCup | #MenInBlue | #INDvZIM pic.twitter.com/VMHTKSVPUC
இன்றைய போட்டிக்கான ஜிம்பாப்வே அணியில் டினோடென்டா மபோசா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் இந்திய அணியில் ரிங்கு சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெறுவதுடன், இமாலய வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
பிளேயிங் லெவன்
இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், தடிவானாஷே மருமணி , தியான் மேயர்ஸ், ரியான் பார்ல், சிக்கந்தர் ரஸா (கேப்டன்), டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிராட் எவன்ஸ், , ரிச்சர்ட் ங்காரவா, டினோடென்டா மபோசா, பிளெஸிங் முசரபானி
A look at #TeamIndia's Playing XI for the #INDvZIM contest 🙌
— BCCI (@BCCI) February 26, 2026
Updates ▶️ https://t.co/p4GxtxGkBf#T20WorldCup | #MenInBlue pic.twitter.com/CTXKP3bwIu
நேருக்கு நேர்
இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையிலும் 13 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் இந்திய அணி 10 வெற்றிகளை பதிவு செய்து தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. மறுபக்கம் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம்
சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் பவுலர்களுக்கு சாதகமான மைதானமாக திகழ்கிறது. இங்கு இதுவரை 16 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 9 போட்டிகளிலும், சேஸிங் செய்த அணிகள் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
A crucial clash up next in Chennai 🏟️
— BCCI (@BCCI) February 26, 2026
All the best #TeamIndia 🇮🇳
💻 https://t.co/hIL8VeeCtI
📱 Official BCCI App#T20WorldCup | #MenInBlue | #INDvZIM pic.twitter.com/lKTZahdBJ7
இதையும் படிங்க |
நேரலை தகவல்கள்
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதே போல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டியை காண முடியும்.

