ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை 2026: விராட் கோலி சாதனையை முறியடித்த சாஹிப்சாதா ஃபர்ஹான்

டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சாஹிப்சாதா ஃபர்ஹான் முறியடித்துள்ளார்.

சாஹிப்சாதா ஃபர்ஹான்
சாஹிப்சாதா ஃபர்ஹான் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 1, 2026 at 4:43 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம் நேற்று பல்லகலேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஃபர்ஹான் மற்றும் ஜமான் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சாஹிப்சாதா ஃபர்ஹான் 100 ரன்களையும், ஃபகர் ஜமான் 84 ரன்களையும் சேர்த்தனர்.

இலங்கை அணி தரப்பில் தில்ஷன் மதுஷங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் பவன் ரத்நாயக 58 ரன்களையும், இறுதிவரை களத்தில் இருந்த கேப்டன் தசுன் ஷனகா 76 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக இலங்கை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இருப்பினும் நிகர ரன் ரேட் காரணமாக பாகிஸ்தான் அணியானது அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டியில் சதம் விளாசிய சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆட்ட நாயகன் விருதை வென்றார். மேற்கொண்டு இந்த போட்டியில் அவர் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.

விராட் கோலி சாதனை முறியடிப்பு

அந்த அணியில் இப்போட்டியில் சாஹிப்சாதா ஃபர்ஹான் சதம் விளாசியதன் மூலம், நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 383 ரன்களை எட்டியுள்ளார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக இந்திய வீரர் விராட் கோலி 2014ஆம் ஆண்டில் 319 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை ஃபர்ஹான் முறியடித்துள்ளார்.

ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்

  • சாஹிப்சாதா ஃபர்ஹான் - 383 ரன்கள் (2026)
  • விராட் கோலி - 319 ரன்கள் (2014)
  • திலகரத்னே தில்ஷன் - 317 ரன்கள் (2009)
  • பாபர் அசாம் - 303 ரன்கள் (2021)
  • மஹீலா ஜெயவர்தனே - 302 ரன்கள் (2010)

உலகின் முதல் வீரர்

மேலும் சாஹிப்சாதா ஃபர்ஹான் நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே சீசனில் இரண்டு சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்த அவர், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் சமன் செய்து அசத்தினார்.

அதிகபட்ச பார்ட்னர்ஷிப்

இந்த போட்டியில் தொடக்க வீரர்களான சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபகர் ஜமான் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 176 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய ஜோடி எனும் ஃபின் ஆலன் - டிம் செஃபெர்ட் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளனர்.

இதையும் படிங்க

டி20 உலகக் கோப்பை தொடரில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்கள்

  • 176 - சாஹிப்சாதா ஃபர்ஹான் & ஃபகார் ஸ்மான் (பாகிஸ்தான்) vs இலங்கை, 2026*
  • 175 - ஃபின் ஆலன் - டிம் செஃபெர்ட் (நியூசிலாந்து) vs யுஏஇ, 2026
  • 170 - ஜோஸ் பட்லர் & அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து) vs இந்தியா, 2022
  • 168 - குயின்டன் டி காக் & ரைலீ ரூஸோவ் (தென்னாப்பிரிக்கா) vs வங்கதேசம், 2022
  • 166 - மஹேல ஜெயவர்த்தனே & குமார் சங்கக்கார (இலங்கை) vs வெஸ்ட் இண்டீஸ், 2010