டர்பன் டெஸ்ட்| தென்னாப்பிரிக்காவை சுருட்டிய ஆஸ்திரேலியா; ஜோ ரூட் சாதனையை முறியடித்தார் ஸ்டீவ் ஸ்மித்!
இப்போட்டியில் 2 கேட்சுகளைப் பிடித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பர் அல்லாத ஃபீல்டராக அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்தார்.


Published : October 11, 2026 at 8:46 PM IST
ஹைதராபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டர்பனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, மேத்யூ ரென்ஷாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 390 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக மேத்யூ ரென்ஷா 190 ரன்களைக் குவித்தார்.
Stumps, Day 3! 🏏 Play comes to an end due to bad light on Moving Day, with Australia on 33/0 after 5.4 overs, leading by 139 runs in the first Test. 🇿🇦 We’ll be back tomorrow from 09:30, so be sure to catch all the action live on SuperSport and SABC 3! 📺 Tickets are still available at https://t.co/0JX6zZHS1C for the remainder of the Test match. 🎟️ #Unbreakable #SAvAUS
— Proteas Men (@ProteasMenCSA) October 11, 2026
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தது. அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ரியான் ரிக்கெல்டன் ரன்கள் ஏதுமின்றியும், ஐடன் மார்க்ரம் 37 ரன்களிலும், டேவிட் பெடிங்ஹாம் 49 ரன்களிலும், கேப்டன் டெம்பா பவுமா 3 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 ரன்களையும், வியான் முல்டர் 30 ரன்களையும், கேஷவ் மகாராஜ் 34 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிமோன் ஹார்மர் 35 ரன்களையும் சேர்த்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 106 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்களைச் சேர்த்தது. இதில் டிராவிஸ் ஹெட் 10 ரன்களுடனும், நிக் மேடின்சன் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 139 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நாளை 4ஆம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளது.
Two incredible catches from Steve Smith has South Africa on the back foot early on day three 😲 #SAvAUS Live blog: https://t.co/hFfuHGM0fg https://t.co/sAEkbj26Ca
— cricket.com.au (@cricketcomau) October 11, 2026
இந்நிலையில், இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி, இப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் டேவிட் பெடிங்ஹாம், டெம்பா பவுமா ஆகியோரது கேட்சுகளைப் பிடித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பர் அல்லாத ஒரு ஃபீல்டராக அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற சாதனையை ஸ்மித் படைத்துள்ளார்.
| இதையும் படிங்க |
முன்னதாக இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 220 கேட்சுகளைப் பிடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் ஸ்டீவ் ஸ்மித் 222 கேட்சுகளைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் 210 கேட்சுகளைப் பிடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார். மேலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்களைக் குவித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் ஸ்டீவ் ஸ்மித் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

