மீண்டும் பெங்களூருவில் களமிறங்கும் ஆர்சிபி: ரசிகர்கள் கொண்டாட்டம்
ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசனுக்கான தொடக்க விழா மற்றும் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Published : March 4, 2026 at 4:05 PM IST
பெங்களூரு: 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது 7 ஹோம் போட்டிகளில் 5 போட்டிகளை பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் விளையாடும் என்பதை அந்த அணியின் சிஇஓ ராஜேஷ் மேனன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 19 ஆவது சீசன் இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளது. மேலும் இந்த தொடருக்கான வீரர்கள் மினி ஏலமும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதனையடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து ஐபிஎல் அணிகள் தீவிரமாக தயாராகி வருவதுடன், போட்டிக்கான மைதானங்களில் ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ஆனால் இம்முறை நடப்பு சாம்பியன் என்ற அந்தஸுடன் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற கேள்விகள் அதிகரித்திருந்தன. ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நேரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
அச்சம்பவத்திற்கு பிறகு பெங்களூரு சின்னசாமி மைதானம் போட்டிகளை நடத்த தகுதியற்றது என அறிவிக்கப்பட்டதுடன், அங்கு நடைபெற இருந்த மகாராஜா பிரீமியர் லீக், ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டிகள், மகளீர் பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்கள் வேறு மைதானங்களுக்கு மாற்றப்பட்டன. இதுபோன்ற சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் போட்டிகள் மீண்டும் பெங்களூருவில் நடத்தப்படுமா? அல்லது வேறு மைதானத்திற்கு மாற்றப்படுமா? என்ற சந்தேகங்கள் எழுந்தது.
இந்த நிலையில் எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கர்நாடகா அமைச்சரவை கூட்டம் அனுமதி அளித்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி தங்களுடைய ஹோம் போட்டிகளை பெங்களூருவில் விளையாடுவதுடன், எதிர்வரும் ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டி மற்றும் சீசனின் இறுதிப்போட்டியும் பெங்களூரு மைதானத்தில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய ஹோம் போட்டிகளுக்கான மைதானத்தை உறுதி செய்துள்ளது. அதன்படி, ஆர்சிபி அணி விளையாடும் 7 ஹோம் போட்டிகளில், 5 போட்டிகளை சின்னசாமி மைதானத்திலும், மீதமுள்ள 2 போட்டிகள் ராய்ப்பூரிலும் நடைபெறும் என்பதை உறுதி செய்துள்ளது.
🚨 RCB TO PLAY FIVE HOME GAMES IN CHINNASWAMY ✅
— RCB Xtra (@Rcb_Xtra) March 3, 2026
AND REMAINING TWO IN RAIPUR DUE TO PRIOR COMMITMENTS 🚨 pic.twitter.com/cr6TnrSLvB
இதுகுறித்து ஆர்சிபி அணியின் சிஇஓ ராஜேஷ் மேனன் கூறுகையில்,"எம். சின்னசாமி மைதானம் எங்கள் சொந்த மைதானத்தை விடவும் அதிகம். ஒரு அணியாக எங்கள் அடையாளம் உண்மையிலேயே உயிர்ப்பிக்கும் இடம் அதுதான். எங்கள் ரசிகர்கள் தான் அணி வீரர்களின் உந்து சக்தியாக இப்பதுடன், ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அவர்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் எங்களுடன் துணை நின்றுள்ளனர். அதனால் அவர்கள் தங்களுஅடிய சொந்த மண்ணில் தங்கள் அணியின் போட்டியை காண நிச்சயம் தகுதியானர்வர்கள். அதெற்கேற்ப எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி பெங்களூருவில் ஐந்து போட்டிகளில் விளையாடும் என்பதை உறுதிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க |
இதன் மூலம் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர் வரும் ஐபிஎல் தொடரில் தங்களின் முதல் போட்டியைச் சொந்த மண்ணில், சொந்த ரசிர்கள் மத்தியில் விளையாட ஆர்வமாக உள்ளது. இது ஆர்சிபி வீரர்கள் மற்றும் அணியின் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

