சூப்பர் கோப்பை 2026: இறுதிப் போட்டியில் பார்சிலோனாவை எதிர்கொள்ளும் ரியால் மேட்ரிட்
சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் பார்சிலோனா எஃப்.சி. அணியை எதிர்த்து ரியல் மேட்ரிட் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Published : January 9, 2026 at 3:43 PM IST
ஹைதராபாத்: அத்லெடிக் மேட்ரிட் அணிக்கு எதிரான சூப்பர் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மேட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஸ்பேனிஷ் கால்பந்து கூட்டமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் கோபா டெல் ரே மற்றும் லா லிகா கால்பந்து தொடர்களில் வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த அணிகள் பங்குபெற்று வருகின்றன. அந்த வகையில் 2026ஆம் ஆண்டிற்கான சூப்பர் கோப்பை தொடருக்கான அரையிறுதி போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மேட்ரிட் மற்றும் அத்லெடிகோ மேட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின் ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல் மேட்ரிட் அணிக்கு ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் ஃபெடரிகோ வால்வெர்டே மூலம் முதல் கோல் கிடைத்தது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோலடிக்க எடுத்த முயற்சிகள் எடுபடவில்லை.
That was a QUALITY goal, @RodrygoGoes 🤌
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) January 8, 2026
(and a QUALITY assist, @fedeevalverde) pic.twitter.com/A7qJxHjOWt
இதன் காரணமாக முதல் பாதி ஆட்டநேர முடிவில் ரியல் மேட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட ரியல் மேட்ரிட் அணிக்கு ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் ரோட்ரிகோ மூலம் இரண்டாவது கோல் கிடைத்தது. இதன் மூலம் ரியல் மேட்ரிட் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
அதே சமயம் தோல்வியைத் தவிர்க்க கடுமையாக போராடிய அத்லெடிகோ மேட்ரிட் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் அலெக்ஸாண்டர் கோலடித்து அசத்தினார். ஆனால் அதன் பின் அந்த அணி எடுத்த அனைத்து கோலடிக்கும் முயற்சிகளும் எதிரணியால் தகர்க்கப்பட்டது. இதனால் ஆட்ட நேர முடிவில் ரியல் மேட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அத்லெடிகோ மேட்ரிட் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
🧭 A mere 108 km/h@fedeevalverde pic.twitter.com/eXurBSrZrT
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) January 8, 2026
முன்னதாக நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பார்சிலோனா மற்றும் அத்லெடிக் கிளப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின் முடிவில் பார்சிலோனா அணி 5 -0 என்ற கோல்கள் கணக்கில் அத்லெடிக் கிளப் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. இதில் அதிகபட்சமாக ரஃபின்ஹா இரண்டு கோல்களைப் பதிவு செய்திருந்தார்.
𝐓𝐡𝐞 𝐟𝐢𝐧𝐚𝐥 𝐢𝐬 𝐬𝐞𝐭. pic.twitter.com/xqOe4zd1i8
— FC Barcelona (@FCBarcelona) January 8, 2026
இதையும் படிங்க |
இதனையடுத்து ஜனவரி 12ஆம் தேதி நடைபெற இருக்கும் சூப்பர் கோப்பை இறுதிப்போட்டியில் பார்சிலோனா எஃப்.சி. அணியை எதிர்த்து ரியல் மேட்ரிட் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இரு அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இதில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

