மலேசிய ஓபன் 2026: அரையிறுதியில் பி.வி.சிந்து; இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு ஏமாற்றம்
இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி நடப்பு மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிச்சுற்றுடன் வெளியேறியது.

Published : January 9, 2026 at 6:27 PM IST
கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் கடந்த ஜனவரி 06ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, ஜப்பான் வீராங்கனை அகனே யமகுச்சி எதிர்கொண்டார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட பி.வி. சிந்து முதல் செட்டை 21-11 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். பின்னர் இரண்டாம் செட் போட்டிகள் தொடங்க இருந்த நிலையில், அகனே யமகுச்சி காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால் போட்டி முடிவில் பி.வி. சிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நடப்பு மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டிக்கும் பி.வி.சிந்து முன்னேறியுள்ளார். நாளை நடைபெற இருக்கும் அரையிறுதி ஆட்டத்தில் அவர், சீனாவின் வாங் ஷியை எதிர்கொள்ளவுள்ளார்.
Queen PV storms into the semis of #MalaysiaOpen 🤩 pic.twitter.com/2S8d0KUcMq
— BAI Media (@BAI_Media) January 9, 2026
இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் முகமது ஷோஹிபுல் ஃபிக்ரி, ஃபஜர் அல்ஃபியன் இணையை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை கைப்பற்றினர்.
ஆனாலும் முதல் செட் செட் முடிவில் இந்தோனேசிய வீரர்கள் 21- 10 என்ற புள்ளி கணக்கில் இந்திய இணையை வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்திலும் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் இந்த செட்டை யார் கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
PETRONAS Malaysia Open 2026
— BWFScore (@BWFScore) January 9, 2026
MD - QF
🇮🇩Fajar ALFIAN🏅
21 23 🇮🇩Muhammad Shohibul FIKRI🏅
🇮🇳Satwiksairaj RANKIREDDY
10 21 🇮🇳Chirag SHETTY
🕚 in 47 minutes
இதில் இந்திய இணை இறுதிவரை போராடிய நிலையிலும், 21-23 என்ற கணக்கில் செட்டை இழந்தது. இதன் மூலம் இந்தோனேசியாவின் முகமது ஷோஹிபுல் ஃபிக்ரி, ஃபஜர் அல்ஃபியன் இணை 21-10, 23-21 என்ற நேர் செட் கணக்கில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இதையும் படிங்க |
இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் காரணமாக சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி நடப்பு மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிச்சுற்றுடன் வெளியேறியது. ஏற்கெனவே இந்தியாவின் லக்ஷயா சென், ஆயுஷ் ஷேட்டி ஆகியோர் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், தற்சமயம் இரட்டையர் பிரிவிலும் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.

