ஆல் இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் பிவி சிந்து... காரணம் என்ன?
இங்கிலாந்தில் நாளை (மார்ச் 3) முதல் தொடங்கவுள்ள ஆல் இங்கிலாந்து பேட்மிட்டன் தொடரில் பி.வி.சிந்து பங்கேற்பாரா? என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.


Published : March 2, 2026 at 8:15 PM IST
ஹைதராபாத்: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக விமான சேவை முடங்கியுள்ள நிலையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து துபாயில் சிக்கியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் ஆயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். இதன் காரணமாக ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அந்த வகையில் மறுஅறிவிப்பு வரும் வரை துபாய் விமான நிலையமும் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. .
இதற்கிடையே, பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்காக துபாய் விமான நிலையம் சென்ற லட்சக்கணக்கான பயணிகள் இந்த அறிவிப்பு காரணமாக அவதிக்குள்ளாகியுள்ளனர். அதன் ஒருபகுதியாக, ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இங்கிலாந்து செல்ல இருந்தார். அதற்காக அவர் பர்மிங்ஹாம் செல்வதற்காக துபாய் விமான நிலையம் சென்ற நிலையில், இந்த அறிவிப்பு காரணமாக அவர் விமான நிலையத்திலேயே சிக்கியுள்ளார்.
இந்த நிலையில் தான் இங்கிலாந்தில் நாளை (மார்ச் 3) முதல் தொடங்கவுள்ள ஆல் இங்கிலாந்து பேட்மிட்டன் தொடரில் பி.வி.சிந்து பங்கேற்பாரா? என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் நாளைக்குள் பி.வி.சிந்து இங்கிலாந்து செல்ல முடியாவிட்டால், அவரால் இந்த தொடரில் பங்கேற்க இயலாது. இதன் காரணமாக அவர் தற்சமயம் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரிலிருந்தும் விலகும் சூழல் உருவாகியுள்ளது.
It’s hard to process what’s unfolding right now. Hearing the interceptions overhead and seeing how quickly everything has escalated is honestly terrifying. So many disturbing videos are coming to light, and this is sadly the reality of what is happening. Dubai is a city I deeply…
— Pvsindhu (@Pvsindhu1) February 28, 2026
முன்னதாக பிவி சிந்து தனது சமூல வலைதளத்தில் பகிர்ந்த பதிவில், "இப்போது நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை ஜீரணிப்பது கடினமாக உள்ளது. ஏனெனில் தலைக்கு மேல் ஏவுகணைகள் செல்லும் சத்தத்தைக் கேட்பதும், இங்குள்ள நிலைமைகள் மோசமடைந்ததுள்ளதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. துபாய் நான் மிகவும் விரும்பும் ஒரு நகரம். அதற்கான காரணம் இது மிகவும் பதுகாப்பு நிறைந்த ஒரு இடம்..
அதனால் தான் இந்தத் தருணத்தைப் புரிந்து கொள்வது இன்னும் கடினமாக இருக்கிறது.என் நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இங்கு ஈரான் உடனான போர்ச் சூழல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், நானும் எனது குழுவினரும் தற்போது துபாயில் பாதுகாப்பாக இருக்கிறோம். இந்தச் சூழல் விரைவில் கடந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” என்று கூறி இருந்தார்.
இதையும் படிங்க |
இதற்கிடையே, மற்ற இந்திய வீரர்களான லக்ஷ்ய சென், சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி, மற்றும் தெரசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் உள்ளிட்டோர் சில தினங்களுக்கு முன்னரே பர்மிங்ஹாம் சென்றடைந்து விட்டனர். அதே சமயம் மற்ற சில வீரர்கள் இந்த அசாதாரன சூழல் காரணமாக பயணத்தை ரத்து செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

